அன்பு தானே எல்லாமே! | Kavithai Kuzhal- Tamil Kavithaigal
அன்பு கவிதை – அன்பு தானே எல்லாமே! | Kavithai Kuzhal
அனைவரும் அன்பு உள்ளவரே!
நீ பிரியாத வரையில்…
– கவிதை குழல்
கவிதை விளக்கம்:
அன்பு கவிதை – அன்பு தானே எல்லாமே! | Kavithai Kuzhal
உலகத்தின் அன்பு ஒன்றுதான் அனைவரையும் ஒன்று சேர்த்து, இணைந்து வாழ வைக்க உதவுகின்றது.
யார் ஒருவர் அன்புடன் உறவாட தொடங்குகின்றோ, அவரிடத்திலே உறவுகள் நிறைந்து காணப்படுகின்றது.
ஒருவனுடன் உறவுகள் நிலைத்து இருப்பதற்கு காரணம் என்னவென்றால் அவன் பழகும் விதமே ஆகும்.
அன்புடன் பழகினால் அவர்களும் அன்புடன் இருப்பார்கள். ஆனால் அவர்கள் மீது கோபத்தை கொண்டால் அவர்களும் அதையே தான் செய்வார்கள்.
ஒருவரிடத்தில் நாம் பழகும் போது எவ்வாறு இருக்கின்றோமோ, அதைப் பொருத்தே அன்பானது கிடைக்கும்.
ஒருவரிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ, அதை நாமும் அவர்களுக்கு வழங்க முற்படுதல் வேண்டும் தானே.
உறவுகளை விட்டு பிரிவதற்கு காரணம் அவரவர் செயலே ஆகும்.
உறவில் எத்தகைய பிரச்சினைகள் உருவானாலும், அமைதியாக இருந்து கோபத்தில் வார்த்தைகளை விடாமல் இருத்தல் வேண்டும்.
உலகத்தில் உள்ள அனைவரும் அன்பு உள்ளவர்கள் தான். அனைவரிடத்தில் அன்பை பெறுவதை தான் இன்னும் கற்று கொள்ளாமல் இருக்கின்றோம்.
உறவுகள் உடன் இணைந்து வாழ வேண்டுமெனில் அன்பை பகிர வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி!.
– கவிதை குழல்