அறம் – அடக்கமுடைமை | Kavithai Kuzhal
அடக்கமுடைமை என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள், ஒருவன் மனம், மொழி,மெய் போன்றவற்றை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
ஒருவன் ஐம்புலன்களை அடக்கி வாழ்ந்தால் மட்டும் தான் தனக்கு தேவையானதை தன்னால் ஆக்கி கொள்ள முடியும். ஐம்புலன்களை அடக்கி ஆளத் தெரியவில்லை என்றால் மிக பெரிய துன்பத்திற்கு உள்ளாவான்.
ஒரு மனிதன் தனக்கு ஏற்படும் சினத்தை வெளிப்படுத்தாமல், அடக்கி கொள்வது அவனுக்கு வெற்றியை தரவல்லது. ஒருவர் தமக்கு தீஙகு செய்த உடனே அவர் மீது கோபம் கொண்டு அவற்றை வெளிப்படுத்தினால் அன்று ஒரு நாளைக்கே அது இன்பத்தை தரும்.
கோபத்தை வெளிப்படுத்தாமல் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் அது தமக்கு புகழை ஏற்படுத்தித் தரும்.
கோபம் காரணமாக மக்கள் தங்கள் குடும்பத்தில் நிறைய பிரச்சினையை சந்திக்கிறார்கள். வாழும் வாழ்க்கையில் பிரச்சினை இல்லாமல் இருக்காது. பிறகு ஏன் கோபப்பட்டு தனது சுய ஆற்றலை இழந்து கடும் சொற்களை பேசி உறவுகளை காயப்படுத்த வேண்டும்.
உறவுகள் தமக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை நாம் சுற்றம் சூழ வாழ் என்ற பிரிவில் பார்த்திருக்கிறோம் அல்லவா.
உறவுகள் செழிக்க வேண்டுமெனில், நாவிலிருந்து வெளிவரும் கடும் சொற்களை கட்டுப் படுத்த வேண்டும். அப்போது தான் சொற் குற்றத்தில் ஈடுபடாமல் தன்னை காத்துக் கொள்ள முடியும்.
அடக்கம் என்பது ஒன்றும் செய்யாமல் அடங்கியிருந்தது அல்ல. தமக்கு ஏற்படும் நன்மை, தீமைகளை ஆராய்ந்து மனதை நல்வழியில் செலுத்துவதாகும்.
அடக்கத்துடன் ஏன் வாழ வேண்டும்? என்பதை ஒரு ஊரில் நிகழ்ந்த நிகழ்வினை காண்பதன் மூலம் அடக்கத்தின் அவசியத்தை புரிந்து கொள்ளலாம்.
ஒரு ஊரில் ஒரு குடும்பத்தில், தாய், தந்தை,மகன் என மூன்று பேர் வசித்து வருகின்றனர்.
தந்தை ஆனவர் தன் குடும்ப நிலைமையை சமாளிக்க விவசாய தொழிலை செய்து வருகிறார்.இவருக்கு சட்டென்று கோபம் வந்துவிடும். ஆனால், குணத்தால் நல்லவர் தான்.
இதில் தாய் தனக்கான பணியை செய்து, கணவன் மற்றும் மகனின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்.
மகன் ஆனாவன் கொஞ்சம் குறும்புகார பையன் ஆவான் . பாலிய பருவத்தில் அனைவருமே அப்படித்தானே இருந்திருப்போம்.
மகன், வீட்டில் அமைதியாக இருக்காமல் அனைத்து பொருள்களையும் கீழே தள்ளி கொண்டிருந்தான்.
இதனால் தந்தைக்கு தான், கோபமானது உடனே வருமே, மகனை அடித்து திட்டிவிடுகிறார்.
தந்தை நாவிலிருந்து உதிர்த்த வார்த்தையானது மகனுக்கு மிகவும் வேதனையை அளித்தது.
தந்தைக்கு கோபம் தனித்த வேளையில், சிந்தித்து பார்க்கும் போது, நம் மகனை இவ்வாறு கடும் சொற்களால் திட்டிவிட்டோமே என தந்தையும் வருத்தம் அடைகிறார்.
பிறகு, தன் மகனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்து, மன்னிப்பு கேட்டு இருவரும் சேர்ந்து விட்டனர்.
ஆனால், நாவிலிலிருந்து வெளிப்பட சொல்லால் மனதில் ஏற்பட்ட தாக்கம் மாறுமா என்ன?
அடக்கம் இல்லாமல் வாழ்ந்தால் ஒருவனுக்கு அது அழிவை ஏற்படுத்தும். அடக்கத்துடன் வாழ்வதே இல்வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.
இதன் மூலம் அடக்கத்தின் அவசியத்தை புரிந்து கொண்டிருப்பீர்கள்.
அடக்கத்துடன் வாழ்வதே மனித வாழ்வுக்கு வளம் என்பதை நினைவில் கொள்.
அடக்கத்துடன் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் கவிதைகளை இனி காணலாம்.
- நாவடக்கம்
வில்லில் இருந்து வெளிப்பட்ட
அம்பையும் திரும்ப பெற முடியாது.
வாயிலிருந்து வெளிப்பட்ட
சொல்லையும் திரும்ப பெற முடியாது.
சிந்தித்து பேசுங்கள்!
-கவிதை குழல்