அறம் – அறம் செய் | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
அறம் – அறம் செய் | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
வணக்கம்!
அறம் செய் என்ற பகுதியின் வாயிலாக ஒருவன் ஏன் அறத்தை பின்பற்ற வேண்டும் மற்றும் அறத்தின் வாயிலாக அவன் அடையும் நன்மைகளை பற்றி தான் காணவிருக்கிறோம்.
அதற்கு முதலில் அறம் என்றால் என்ன? மற்றும் அறத்தை ஏன் கடைபிடிக்க வேண்டும்? என்ற கேள்விகளுக்கு நாம் விடையை தெரிந்து கொள்ள வேண்டும்.
அறம் என்பது என்னவென்றால் நாம் எந்த ஒரு செயலை செய்யும்போதும் நம் மனதில் எவ்வித குற்றமும் இல்லாத நிலை உருவாதே ஆகும்.
மனதில் குற்றம் இல்லாமல் ஒரு செயலை செய்யத் தொடங்கினால் மட்டுமே அந்த செயலை நாம் முழுமையாக முடிக்க முடியும் மற்றும் அந்த செயலில் நாம் முழுமையாக நிறைவை பெற முடியும்.
எனவேதான் அற வழியில் செல்ல வேண்டும் என நம் முன்னோர்கள் நமக்கு வழி காட்டினர்.
அவ்வாறு அறவழி தவறி நாம் ஒரு செயலை மேற்கொண்டால் அச்செயலை நம்மால் முழுமையாக செய்ய முடியாது மற்றும் அந்த செயலால் துன்பம்தான் ஏற்படும்.
அற வழியில் பயணித்து ஒரு செயலை மேற்கொண்டால் மட்டுமே செயலில் வெற்றியை அடைய முடியும்.
அறவழி தவறி செயலை மேற்கொண்டால் வெற்றி பெறும் நிலையில் இருந்தாலும் வெற்றியை அடைய முடியாது.
இதன் மூலம் அறம் என்றால் என்ன என்பது பற்றி தெளிவு மனதில் பிறந்திருக்கும்.
சரி அடுத்து நாம் நான் ஏன் அறத்தை பின்பற்ற வேண்டும் என்ற கேள்விக்கான விடையைப் பார்க்கலாம்.
ஒருவன் அறத்தை கடைபிடித்து வாழ்ந்தால் மட்டுமே அவன் வாழ்வு முழுவதும் இன்பத்தை அடைவான்.
ஒருவன் அறத்தைக் கடைப்பிடித்து அதன்மூலம் தொழிலைத் தொடங்கி வெற்றி கொண்டால் மட்டுமே இல்வாழ்க்கையில் இன்பத்தை அடைய முடியும்.
அறம் தவறி பொருளீட்டி வைத்துக் கொண்டால் அதன் மூலம் அவனுக்கு இன்பம் உண்டாகாது; துன்பம் தான் ஏற்படும்.
எனவே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமெனில் அற வழியில் செல்லவேண்டும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அற வழியாக சென்று நாம் வாழ்வின் பயனை அடைய வேண்டும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அறவழி ஒன்றே இறைவனிடம் சேரக்கும்.
பிறவி பயனை அடைய வேண்டுமெனில், அறவழியில் செல்லுதல் வேண்டும்.
கவிதை குழலின் கவிதைகளின் வாயிலாக ‘’அறம் செய்’’ என்ற தலைப்பில் இடம்பெற்றிருக்கும் கவிதைகளை காணுங்கள்.
1.கருணை
தர்மத்தின் ஆணிவேர்
கருணையாகும்!
கருணை கொண்டு மனிதர்கள்
வாழ்ந்தால் இவ்வுலக வாழ்வானது
என்றும் இன்பமே!
சிந்தித்து செயலாற்றுங்கள்…
– கவிதை குழல்
2.குடி காத்தல்
குடியை கெடுக்க
கூட்டம் கூடினாலும்,
அவன் பின்பற்றும் தர்மம்
அவனை காப்பாற்றும்.
– கவிதை குழல்
3.அறவழி
குருதி குறைந்து
உடல் மெலிந்து
வயது முதிர்ந்து
காற்று வெளியேறும்
வேளையிலும்
இன்பம் தருவது
அறவழியே.
-கவிதை குழல்
4.வாழ்வு நிறைவு
பசி நிறைவு பெற உணவு உட்கொள்ளுதல் போல,
வாழ்வு நிறைவு பெற வேண்டுமெனில்
அறவழியில் செல்லுதல் வேண்டும்.
-கவிதை குழல்
5.கிடைக்கும் நன்மை
அறவழியை பின்பற்றுவதால் கிடைக்கும்
நன்மையை அறிந்தாவது அறவழியில் செல்லுங்கள்.