அறவழி வாழ்வு | Kavithai Kuzhal – Tamil Kavithaigal

அறவழி வாழ்வு ! 

குறுதி குறைந்து

உடல் மெலிந்து

வயது முதிர்ந்து

காற்று வெளியேறும் வேளையிலும்

இன்பம் தருவது

அறவழியே.

– கவிதை குழல்

கவிதை விளக்கம்:

அறவழி வாழ்வு!

வணக்கம்!

உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் என்றாவது ஒரு நாள் இறக்கத்தான் நேரிடும்.

ஒரு மனிதனானவன் இறக்கும் தருவாயில் கூட அவன் இதுவரை பின்பற்றிய தர்ம வழியானது அவனுக்கு இன்பத்தையே தரும்.

ஒரு மனிதனுக்கு வயது முதிர முதிர அவன் உடலில் உள்ள இரத்தத்தின் அளவானது குறையத் தொடங்கும். அதோடு மட்டுமல்லாமல் உடலானது மெலிந்தும் காணப்படும்.

ஒருவன் தன் வாழ்நாளில் செய்த நல்ல காரியங்கள் அனைத்தும் இறக்கும் தருவாயில் அவன் கண் முன்னரே வந்தடையும்.

ஒருவன் தனது வாழ்நாளில் நல்ல காரியங்களை மட்டும் செய்திருந்தால், அவனுக்கு ஏற்படும் இறப்பானது அதுவும் மகிழ்ச்சியாகத் தான் இருக்கும்.

ஆனால் வாழ்க்கையில் தீய வழியை பின்பற்றி வாழ்ந்திருந்தால், இதுவரை தீய வாழ்வில் வாழ்ந்து விட்டோமே என்ற மன துன்பமானது இறக்கும் தருவாயிலும் கூட அவனை விட்டு நீங்காமல் இருக்கும்.

ஒருவர் அறநெறியைப் பின்பற்றி வாழ்வதால், ஏற்படும் இறப்பு கூட இன்பத்தையே ஏற்படுத்தும். அதுவே தீய வழியை பின்பற்றி வாழ்ந்தால், ஏற்படும் இறப்பு கூட துன்பத்தை விளைவிக்கும்.

அறம் வழி வாழ்வு இன்பத்தையே தரும்.

இனி, தாம் தான் எப்பாதையில் செல்ல வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டும்.

சிந்தித்து செயல்படுங்கள்.

நன்றி!

– கவிதை குழல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *