அறம் – நீரின் பெருமை | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
அறம் – நீரின் பெருமை | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
வணக்கம்!
நீரின் பெருமை என்ற பகுதியின் வாயிலாக மழையின் சிறப்பையும், நீரின் இன்றியமையாமையும், நீரில்லாமல் ஏற்படும் பிரச்சினைகளையும் பற்றியும் காணவிருக்கிறோம்.
உலகமானது நீர் இன்றி அமையாது. உலக உயிர்கள் வாழ வேண்டுமெனில் நீரின் பங்களிப்பு மிக அவசியமாகும்.
உலகில் வாழும் அத்தனை உயிர்களும் நீரின் தேவையை ஏதாவது ஒரு வகையில் பெற்ற வண்ணமே இருக்கின்றன.
நீரானது மனிதர்களுக்கு மழையின் மூலமாகவும், கிணற்றின் மூலமாகவும், ஊற்றின் மூலமாகவும் கிடைக்கின்றது.
இதில் பெரும்பாலும் மக்கள் அனைவரும் நம்பியிருப்பது மழையை மட்டுமே.
ஒரு நாடானது வேளாண்மை சார்ந்த சமூகம் ஆனாலும் சரி வறண்ட பாலை வன சமூகம் ஆனாலும் அதன் உயிர்களின் ஆதாரம் மழையை.
மழை பெய்தால் மட்டுமே உலகில் பசிக்கொடுமை என்ற நிலைமை உருவாகாது. இல்லையென்றால் பசிக்கொடுமை உண்டாகி அனைத்து இடத்திலும் பஞ்சம் ஏற்படும்.
மழையானது வாழ்விற்கு சிறப்பையும், பொருளீட்டுவதற்கு அடித்தளமாகவும் இருக்கும்.
மழை பெய்தால் மட்டுமே வேளாண்மை செய்து அதன் மூலம் பொருள் ஈட்ட முடியும்.
மழையானது பெய்யாவிடில் நாட்டில் விளைச்சல் இருக்காது இதன் மூலம் நாட்டிற்கு பெரும் துன்பம் ஏற்படும். எவ்வாறு துன்பம் ஏற்படும் என்றால் நாட்டிலுள்ள ஒவ்வொரு மக்களும் தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக தவறான வழிகளில் ஈடுபடுவார்கள்.
இதன்மூலம் நாட்டில் கொள்ளை, கொலை, திருட்டு போன்ற தீய செயல்கள் பெருகும்..
இதனால் நாட்டிற்கு பெரும் துன்பமானது உண்டாகி மக்களது வாழ்க்கையும் தலைகீழாக மாறிவிடும்.
மழை பெய்தால் மட்டுமே அனைவரும் நலமாக வாழ்வார்கள்.
மழை என்பது இறைவனின் ஆணையால் வருவது ஆகும்.
மழையை பெய்விப்பவர் இறைவன் ஒருவனே ஆவார்.
மழை பெய்தால் மட்டுமே மக்களின் வாழ்வு சிறக்கும். அப்போதுதான் மக்களிடத்தில் அமைதியும் இறை உணர்வும் நிறையும்.
மழை பெய்வதால் வளமான பொருளாதாரம் உண்டாகி அதன் மூலம் மக்களின் வாழ்வு சிறப்படையும்.அப்போது தான் சமுதாயத்தில் ஒரே நிலைமை உண்டாக்கி அனைவரது வாழ்க்கையும் மிளிரும்.
எனவே மழை பெய்தால் அதன் தேவையை உணர்ந்து தக்க வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
நீர்நிலைகளின் தன்மையை சரிவர பராமரித்தும் மற்றும் எதிர்கால சந்ததிகளுக்காக அதனை பாதுகாத்து வைத்தலும் ஒவ்வொரு தனிமனிதனின் முக்கிய கடமையாகும்.
எனவே நீரை வீணாக்காமல் அதனை சேமிக்கும் பழக்கத்தை நாம் கைக்கொள்ள வேண்டும் .
நீரை சேமிப்போம்; நல்வாழ்வை அடைவோம்.
கவிதை குழல் ஆனது நீரின் பெருமை பற்றி எளிதாகவும், உள்ளார்ந்த பொருளுடனும் விவரிக்கின்றது.
1.காத்தல்
நீர் ஒன்று இருப்பாதலே,
புவியில் உலக உயிர்கள்
மகழ்ச்சியாக வாழ்கிறது.
-கவிதை குழல்
2.மழை
வற்றாத கடல் நீர் இருந்தாலும்,
நிலப்பரப்பில் மழை பெய்யாவிடில்,
உலக உயிர்கள் துன்புறும்.
-கவிதை குழல்

3.ஆக்கமும் அழிவும்
நீரைப் போல்
ஆக்கம் தருவதும் ஒன்றுமில்லை.
அழிவைத் தருவதும் ஒன்றுமில்லை.
-கவிதை குழல்

4. உழவு
உழவு தொழில் செழிக்க வேண்டுமெனில்,
மழையானது பொழிய வேண்டும்.
மழை பெய்யாவிட்டால் நாட்டில் பஞ்சமானது ஏற்படும்.
-கவிதை குழல்
5. ஒழுக்கம்
உலக உயிர்கள் நிலைபெற்றிருக்கும்,
ஒழுக்கத்துடன் வாழ மழையே காரணமாகும்.
-கவிதை குழல்