Warning: Uninitialized string offset 0 in /home/p95fc9smvxat/public_html/wp-content/plugins/seo-by-rank-math/vendor/mythemeshop/wordpress-helpers/src/helpers/class-str.php on line 235
வாழ்க்கை - ஆசை! | Kavithai Kuzhal - Tamil Kavithaigal

வாழ்க்கை – ஆசை! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal

வாழ்க்கை – ஆசை! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal

வணக்கம்!

கவிதை குழலின் மூலமாக “ஆசை” என்ற தலைப்பில், ஆசையின் காரணமாக  ஏற்படும் நன்மையையும், தீமையையும் பற்றி இப்பதிவில் காணவிருக்கிறோம்.

முதலில் ஆசை என்றால் என்பதை அறிந்து கொள்வோம்.

ஆசை என்பது ஏதாவது ஒன்றின் மீது உள்ள விருப்பமாகும். ஒரு மனிதன் ஆசை கொள்வதால் நன்மையும் தீமையும் ஏற்படலாம்.

மனிதனாவன் தான் மகிழ்வாக வாழ்வதற்காக அனைத்து பொருட்களையும் அடைய நினைக்கின்றான். தான் வாழ வேண்டுமெனில், பொருள்களை சம்பாதிக்க வேண்டும் தான். ஆனால் பொருளீட்டுவது அறவழியில் இருத்தல் வேண்டும்.

பொருள்களை அடைய வேண்டும் என்பதே ஆசையாகும். ஆசையின் மூலமாக ஒருவன் தனக்கான தொழிலை மேற்கொண்டு அதன் மூலம் பொருளீட்டுவது சரி தான். ஆனால், நம் ஆசையின் காரணமாக மேற்கொள்ளும் செயலானது யாரையும் துன்புறுத்துவாக இருத்தல் கூடாது.

ஒருவனுக்கு ஆசையின் காரணமாக செயலை மேற்கொள்வது ஊக்கத்தை தந்தாலும், ஆசையானது எப்போது பேராசையாக மாற தொடங்குகிறதோ, அப்போதே அவனுக்கு அழிவும் ஆரம்பித்து விடுகிறது.

நான் என் குடும்பத்தை காக்க ஆசைக்கொண்டு நான் தொழிலை தொடங்கி சம்பாதிக்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்டால் அதற்கும் பதில் உண்டு.

ஒருவன் தன் குடும்பத்தை காக்க வேண்டியது முக்கியமான கடமையாகும். ஆனால், அதற்காக பணத்தை சம்பாதிக்க வேண்டியதும் முக்கியம் தான்.

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் இதையே தான் நினைக்கின்றான். ஒருவர் தனது சுய நலத்திற்காக மற்ற நபர்களை துன்புறுத்தி அதன் மூலம் பணத்தை சம்பாதிப்பது சரிதானா? சற்று கொஞ்சம் நீங்களே சிந்தித்து பாருங்கள்.

உங்களை போன்று தான் அனைவருக்கும் குடும்பமானது இருக்கும். உங்கள் விட்டில் உள்ள நபர்களைப் போன்றே அவர்கள் வீட்டிலும் இருப்பார்கள். தனது ஆசையின் காரணமாக தீய செயல்களில் ஈடுபட்டு உலகில் நிலைத்து வாழ்ந்தோர் யாருமில்லை.

ஒருவனது ஆசையானது, நல்ல வழியில் அவனை செலுத்துவதாக இருத்தல் வேண்டும்.அதுவே ஆசையானது அவனை தீய வழியில் செலுத்தினால், அதனால் ஏற்படும் பாதிப்பானது அவனை துன்பத்திற்கு உள்ளாக்கும்.

ஒருவன் தன்னுடைய உழைப்பை பயன்படுத்தி, அதில் பணத்தை சம்பாதித்து, வரும் பணத்தை வைத்து குடும்பத்தை நடத்தினால் மகழ்ச்சி ஆனது கிட்டும். ஆனால், அதை விடுத்து தன் தேவையை மீறி, பணம் இல்லாமல் பொருள்களை வாங்கினால் அதனால் குடும்ப சூழ்நிலையானதது வறுமையில் தான் செல்லும்.

ஆசை கொண்ட மனிதனானவன், தன் விரும்பியதை அடையவில்லை என்றாலும் அவன் தீய வழியில் செல்வான். அவனுடைய மனமானது வேதனையில் வாடி தவிக்கும். அந்த சூழ்நிலையில் அவனை நல் வழி படுத்துவதற்காக ஓரு நல்ல உள்ளம் கொண்ட மனிதனின் ஆறுதல் வார்த்தையானது அவனுக்கு தேவைப்படுகிறது.

இதை மட்டும் ஒருவனுக்கு செய்து விட்டால், அவனை காப்பது மட்டுமில்லாமல் அவன் குடும்பத்தையும் அழிவிலிருந்து காப்பற்றி விடலாம்.

நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டுமெனில், ஒருவருக்கொருவர் துணையாக வாழ்தல் வேண்டும்.

ஆசையினால் நிராசை அடைபவர்களை நல்வழி படுத்தலும் ஓவ்வொருவரின் கடமையாக கருதி உதவி செய்தல் வேண்டும்.

ஒருவன் ஆசையை தன் கட்டுபாட்டில் வைத்திருத்தலே அவனை அழிவிலிருந்து காக்கும்.

-கவிதை குழல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *