இன்பம் – கண்டதும் காதல்! | Kavithai Kuzhal
வணக்கம்!
காதல் என்ற வார்த்தையை கேட்கும் போதோ அல்லது படிக்கும் போதோ அனைவருக்கும் உள்ளத்தில் ஒருவிதமான மகிழ்ச்சியானது தோன்றும்.
உலகத்தில் பிறந்த உயிர்கள் அனைத்தும் இல்வாழ்க்கையை தொடங்க காதலே காரணமாகும். காதல் கொண்ட ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் அளவற்ற அன்பை தங்களுக்குள் வெளிப்படுத்துவர்.
காதல் என்ற வார்த்தை எப்போது தோன்றியது என்றால், உலக உயிர்கள் பூமியில் பிறந்த தினத்தில் இருந்தே தான் என்று கூறலாம்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் பருவ காலத்தில் ஏற்படும் மாற்றத்தால் தங்களது உள்ளத்தில் வெளிப்படும் ஒரு புதிய உணர்வால் இருவருக்கும் காதலானது மலர்கிறது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் ஆனது உருவாவதை ஒரு தொடர் நிகழ்வாக இப்பகுதியில் காணலாம்.
வாருங்கள்! காதலை உணர்வோம்.
ஒரு ஆண் பெண்ணை காண்கையில், பெண்ணானவள் தன் அழகால் அவனை கைது செய்து விடுகிறான் .
ஆணானவன் பெண்ணை காண்கையில், அத்தனை அழகு பொருந்திய அவளது முகத்தை கண்டு, இவ்வடிவம் தேவதையா அல்லது மானுட பெண்தானா என வியந்து பார்த்துக் கொண்டே இருக்கின்றான்.
பெண்களுக்கு ஒரு அதிசய சக்தியானது உண்டு. அது என்னவென்றால் தன்னை யார் பார்க்கிறார்கள் என்று உடனே கண்டு பிடித்து விடுவதுதான்.
தன்னைக் காணும் ஆணை அவன் விழி மூடும் நேரத்தில் அவனை முழுவதுமாக பார்த்து விடுகிறாள். பெண்ணானவள் ஒரு நொடி பார்வையில் அந்த ஆடவனின் முழு நடத்தையும் கண்டுகொண்டும் விடுகிறாள்.
ஆணும் தன் அன்பை வெளிப்படுத்தும் வகையில் தினமும் அவளைக் காண சென்று கொண்டே இருக்கிறான். அவளும் அவனை கண்டு கொண்டுதான் இருக்கிறாள்.ஆனால் அந்தப் பெண் என்னை பார்க்க மாட்டேன் என்கிறாளே? என்ற வருத்தம்தான் மனதில் ஏற்படுகிறது.
உண்மையை சொல்லப்போனால் பெண்ணானவள் ஆணை ஒரு நொடி பார்வையில் பார்த்து விடுகிறாள். ஆனால் ஆண்களால் இதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.
கண்களிலே நோக்கும் செயலானது இருவரிடத்திலும் தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகிறது. தினமும் இருவரும் கண்களால் மட்டும் தான் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தனது உள்ளக் கருத்தை கண்களினாலே கூறிக் கொண்டு காதலை செய்து வருகிறார்கள்.
காதலை கண்களால் வெளிப்படுத்தினால் மட்டும் போதுமா என்ன? தனது அன்பை வார்த்தைகளாலும் பரிமாறிக்கொள்ள வேண்டும் அல்லவா.
காதலர்கள் ஆன இவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள வேண்டும் என்று ஒருவரை ஒருவர் நெருங்கி வருகின்றார்கள்.
ஆண் ஆனவன் தனது அன்பை வார்த்தைகளால் கூற பெண்ணும் அதனைக் கேட்க, பெண்ணும் தன் அன்பை வெளிப்படுத்த, ஆணும் அதைக் கேட்க இருவரது உள்ளத்திலும் அளவற்ற மகிழ்ச்சியானது உண்டாகிறது.
இந்த பிரிவில் ஆணும் பெண்ணும் எவ்வாறு காதல் கொள்கிறார்கள் என்ற முறையை கண்டோம்.
இனி கவிதை குழல் கவிதைகளின் வாயிலாக காதலர்கள் இணைந்த முறை கவிதைகளாக பார்க்கலாம்.
1.இவள் பெண் தானா! இல்லை தேவதையா!
எத்தனை அழகை கொண்டு என்னைக்
கைது செய்கின்றாளே!
2. அவனும் பார்க்க அவளும் எதிர்நோக்க
காதலானது கண்களில் உருவானதே!
3.கண்களில் காதல் செய்து முடித்தோம்.
இனிய வார்த்தைகளால் காதல் செய்ய
ஒன்றிணைவோமோ பெண்ணே!
4.அன்பு பரிமாற ஒன்றிணைய
இருவரும் உள்ளத்திலும் மகிழ்ச்சியானது பொங்குகிறது.
5.இரு மனமும் ஒன்றிணைந்து,
அன்பால் கரம்பிடித்து இரு உள்ளமும்
காதலால் வாழத் தொடங்கியது.