இயற்கை – நிலம் எதற்கு? | Kavithai kuzhal – Tamil Kavithaigal

இயற்கை – நிலம் எதற்கு? | Kavithai kuzhal – Tamil Kavithaigal

வணக்கம்!

கவிதை குழலின் மூலமாக இன்றைய பதிவில் நாம் நிலத்திற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

நிலமானது ஒருவரது வளர்ச்சிக்கும் காரணமாக இருக்கும். அழிவுக்கும் காரணமாக இருக்கும்.

உலகில் உள்ள மொத்த நிலப்பரப்பில் நிலமானது ஒரு பங்கு ஆகும். நீரானது மூன்று பங்காகும்.

ஒரு பங்கு உடைய நிலப்பரப்பில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன, தாவரங்கள் என அனைத்து உயிர்களும் நிலையாக வாழ்ந்து வருகின்றன.

ஒவ்வொரு இனத்திலும் பிரச்சினைகள் உண்டாகதான்  செய்கின்றன. அது மனிதனாக இருந்தாலும் சரி, விலங்குகளாக இருந்தாலும் சரி, பறவைகளாக இருந்தாலும் சரி.

ஆனால் இவற்றில் எல்லாவற்றிலும் மனிதனால்தான் மற்ற எல்லா உயிர்களுக்கும் பிரச்சனையானது அதிகமாக ஏற்படுகின்றது.

இனி மனிதனானவன் தன்னுடைய நில ஆசையால் சக மனிதர்களுக்கு என்ன தீங்கை  விளைவிக்கிறான் என்பதை பார்க்கலாம்.

மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்தவன் என அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 

மனிதன் தன்னுடைய தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக அதாவது, உணவு உட்கொள்வதற்கு மரங்கள், செடிகள், மரங்கள் மற்றும் செடிகளில் உள்ள பழங்களை பறித்து முதலில் உண்டு வந்தான். 

பிறகு நெருப்பை உருவாக்கி தனக்குத் தேவையான உணவை சமைத்து உண்டு வந்தான்.

காலப்போக்கில் மாற்றம் ஏற்பட ஏற்பட தனக்குத் தேவையான உணவை பயிரிட்டு வளர்த்து உண்டான்.இந்த பயிரிடும் முறையைத்தான் அன்றைய கால முதல் இன்றைய காலம் வரை நாமும் நிலத்தில் பயன்படுத்தி வருகின்றோம்.

விவசாயம் செய்து உணவை உற்பத்தி செய்ய ஆரம்பித்த மனிதனின் மனநிலையானது இன்று மாறி, நிலமானது தனக்காக நிறைய இருக்க வேண்டுமென்று எண்ணி நிலத்தை அபகரிக்க தொடங்கிவிட்டான்.

உலகில் எத்தனையோ நிகழ்வுகளுக்கு ஆதாரமாக விளங்குவது நிலம் தான். அனைத்து மக்களின் வாழ்வையும் பார்த்துக்கொண்டிருக்கிறது நிலம் மட்டுமே. 

உலகில் பல மாற்றங்கள் நடைபெற்றாலும் மனிதனிடத்தில் நிலத்தின் மீது கொண்ட மோகமானது இன்றளவும் மாறவில்லை.

மனிதன் தனக்கு இந்த நிலம் போதாது இன்னும் நிலமானது தனக்கு வேண்டும் என்று எண்ணி அருகில் இருக்கும் நபரை நிலத்தையும் அபகரிக்க முயற்சி செய்கிறான்.

ஒருவன் ஏற்படுத்தும் பிரச்சனையால் சக மனிதன் தனது வாழ்க்கையை வளமாக வாழ இயலாமல் போகின்றான்.

மற்றொருவன்  இடத்தை அடைவதற்காக அவன் செய்யும் சூழ்ச்சிகள் தான்  ஏராளம்.எவன் ஒருவன் நல்ல எண்ணம் கொண்டவனாக இருந்தாலும் அவனது நிலத்தை ஏமாற்றி நில அபகரிப்பு செய்து விடுகின்றான்.

ஆனால், நிலத்தை  பறி கொடுத்தவர்கள் தன்னால் மற்றவர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படக்கூடாது என்று எண்ணுபவர்களாக இருக்கின்றார்கள்.

மனிதனை மனிதன் வாழ வைப்பது விட்டு அழிப்பதற்காக உருவெடுக்கலாமா? என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

இனி, கவிதை குழல் மூலமாக நிலமானது மனிதனுக்கு அளிக்கும் பயனை கவிதைகள் வழியாக காணலாம்.

1. மண் வளத்தை காத்தால், உயிர் வளத்தை காக்கலாம்.

2 உணவு வழங்கி காக்கும் நிலத்தை ஒவ்வொருவரும் பேணிக்காக்க வேண்டும்.

3.  உழைப்பை நிலத்தில் விதைத்தால், நிலமானது அதன் பயனை உழைப்பவனுக்கு தரும்.

4. நில உயிர் காக்க வேண்டுமெனில்,

 நிலத்தில் இயற்கை உரத்தை பயன்படுத்த வேண்டும்.

– கவிதை குழல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *