பறவைகளை கவனியுங்கள்! | Kavithai Kuzhal

வணக்கம்!

கவிதை குழல் மூலமாக இன்றைக்கு “பறவைகள்” என்ற தலைப்பை எடுத்துக்கொண்டு, பறவைகளில் இருந்து மனிதன் கற்றுக் கொள்ள வேண்டியவற்றை இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

உயிர்களில் மனிதன் தான் சிந்திக்கக்கூடிய ஆவான். அவ்வாறு இருக்கையில் மனிதன் தன் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக இயற்கையிலிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. 

மனிதன் பறவைகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவற்றை தான் இப்பதிவில் நாம் முழுமையாக பார்க்கவிருக்கிறோம். அதற்கு முன் பறவைகளைப் பற்றிய ஒரு சிறிய அறிவை நாம் பெறலாம். 

பறவைகள் இப்புவியில் வாழும் ஓர் உயிரினம் ஆகும். பறவைகள் தங்களுக்கென கூடுகளை அமைத்து அதில் வாழ்ந்து வருகின்றன. அவைகள் தங்களது வாழ்வை மகிழ்ச்சியாக்க தினந்தொரும் இரையைத் தேடிச் செல்கின்றனர்.

பறவைகள் தங்களுக்கு ஏற்ப கால சூழ்நிலைகளை  அறிந்து, அதற்கு தகுந்தவாறு இரை இருக்கும் இடத்தில் முன்னரே கூடுகளையும் அமைத்துக் கொள்கின்றன.

இவைகள் கூடுகளைக் கட்டும் நுட்பத்தை கண்டால், அது நம்மை ஆச்சரியத்தில் உறைய வைக்கும். இது பறவைகளுக்கென உரிய ஒரு கலையே ஆகும்.

பறவைகள் கூடு கட்டுவதற்கு தென்னை சோலை, தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பன்னாடை போன்றவற்றைப் பயன்படுத்தி தனது திறமையால் நெருக்கமாக பின்னல் போன்ற அமைப்பு அதாவது நூல்களை சுற்றி வைப்போம் அல்லவா அது போன்றே தங்களது கூடுகளின் அமைப்பையும் வடிவமைக்கின்றன..

பரந்து விரிந்து இருக்கும் வானில், தன்னுடைய இறகுகளை கொண்டு வானத்தின் எல்லையை காண பறந்து செல்கின்றன.

பறவைகள் இரை தேட செல்லும் போது வானில் ஒரு குழுமமாகவே பறக்கின்றன. பறவைகள் வானில் பறக்கும் போது தங்களுக்குள் ஒருவருக்கொருவர் வழிகாட்டியாக இருந்து இலக்கை நோக்கிச் செல்கின்றன.

பறவைகள் தங்களது இலக்கான இரையை கண்டு கொண்ட பிறகு, அங்கு அனைவரும் ஒன்றாக சேர்ந்து, இரையை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்கின்றன.

பிறகு தான் தேடிய இரையை தன் பிள்ளைகளுக்கு ஊட்டி மகிழ்ச்சியும் அடைகின்றன.

பறவை தாயினது பாசத்தை கண்டால், பறவைகள் அன்பு செய்யும் விதம்  நமக்கு ஆனந்தத்தை ஏற்படுத்தும்.

அன்பு தானே எல்லாமே‌. அன்பை பின்பற்றுபவர்கள் என்றும் வாழ்வில் ஒருவருக்கொருவர் இணைந்து தான் வாழ்கின்றார்கள்.

இதன் மூலம் பறவைகள் வாழ்வு முறையை பற்றிய ஒரு புரிதலை நாம் அறிந்திருப்போம்.

இனி பறவையில் இருந்து மனிதன் கற்றுக் கொள்ள வேண்டியவற்றை அதாவது தன்னுடைய வாழ்வில் இனி மாற்றி கொள்ள வேண்டியவற்றை இப்போது நாம் பார்க்கலாம்.

மனிதன் பூமியில் வாழும் ஒரு உயிரினமாகும். மனிதனானவன் ஆற்றல் உடையவனாக இப்புவியில் விளங்குகின்றான். ஏனென்றால், மற்ற உயிர்களைவிட அவன் சிந்திக்கக்கூடியவானக உள்ளான்.

ஒருவன் தன்னுடைய சிந்தனையை கொண்டு  நற்செயலைத் தொடங்கினால், அது அனைவருக்கும் நன்மையை விளைவிக்கும். அதை விடுத்து அவன் தீய செயல்களில் ஈடுபட்டால், அது தன்னை அழிக்க அவனே தேடிச் செல்லும் வழியாகும்.

உலகில் பிறந்த அத்தனை உயிர்களும் சக உயிர்களுக்கு ஏதாவது ஒன்றை கற்றுக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றன.

பறவையானது தனது இலக்கை அடைய வானில் பறக்கும் போது ஒருவருக்கொருவர் வழி காட்டிக் கொள்கின்றனர். அதுபோல மனிதன் வாழும் போது தன்னை சுற்றியுள்ள மனிதர்களுக்கும் வழிகாட்டியாக இருக்க எண்ணத்தை கைக்கொள்ள வேண்டும்.

ஒருவர் துன்பத்தில் இருக்கும் தருவாயில் அவரது துன்பத்தைப் போக்க வழிகாட்டியாக இருத்தல் நற்செயல் தானே.

பறவைகள் இரையைத் தேடிச் செல்லும் தருவாயில், இரை இருக்கும் இடத்தை கண்டவுடன அனைத்து உயிர்களும் ஒன்றாக இணைந்து தமது தேவைக்கேற்ப எடுத்துக் கொள்கின்றனர்.

பறவைகள் இரையை அடைய ஒரு போதும் சண்டை போடுவதில்லை.

மனிதர்களாகிய நாமும் தன் பசியைப் போக்கிக் கொள்ள தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு இருக்கும் தருவாயில் அனைவரும் தன்னை போன்றே பசியைப் போக்க தான் முயன்று கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு உணரும் போது நம் மனதில் பொறாமையானது உருவாகது. இதன் மூலம் சக மனிதர்களிடையே அன்பானது மேலொங்கும்.

ஒருவன் தனக்கான பொருளைத் தேடிச் செல்லும் போது மற்ற உயிர்களைத் துன்புறுத்தல் என்பது குற்றமாகும்.

பறவைகள் எப்போதும் தனது சுற்றத்தாருடன் இணைந்தே வாழ்கின்றது.

மனிதர்களாகிய நாமும் தம் சுற்றத்தாரோடு இணைந்தே வாழ வேண்டும்..

சுற்றத்தார் தமக்கு எப்பயனையும் அளிக்கவில்லை என்று எண்ணி அவர்களை விட்டு விலகுதல் கூடாது.

உண்மையை சொல்லப் போனால் தான் என்ன நிலைமையில் இருக்கின்றோமோ அதே நிலைமையில் தான் சுற்றத்தார்கள் இருக்கின்றார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எவன் ஒருவன் தன் இன்ப துன்பங்களை மறந்து தன் குடும்பத்திற்காக உழைக்க ஆரம்பிக்கின்றனோ அவனே தனது குடும்பத்தையும், தனது சொந்தங்களையும் மகிழ்ச்சியாக வாழ வைப்பான்.

சுற்றத்தாரோடு இணைந்து வாழும் வாழ்க்கையே மகிழ்ச்சியை தரும்.

வாழும் வாழ்க்கை ஒருமுறை தான். வாழுங்கள்! மகிழ்ச்சியாக வாழுங்கள்.

நன்றி 

-கவிதை குழல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *