இயற்கை – தொழிலை பயிற்றுவிக்கும் மரம்! | Kavithai Kuzhal
இயற்கை – தொழிலை பயிற்றுவிக்கும் மரம்! | Kavithai Kuzhal
வணக்கம்!
இயற்கையானது மனிதனுக்கு தினம் தோறும் புதுப்புது விஷயங்களை கற்றுத் தருகின்றது.
இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் நம் வீட்டில் இருக்கும் தென்னை மரம் ஆனது ஒரு தொழிலுக்கு ஆன அறிவுரையை வழங்குகின்றது. அதாவது ஒருவன் தொழிலை மேற்கொள்ள வேண்டுமானால் தென்னை மரத்திலிருந்து கற்றுக் கொள்ளலாம். அந்த அறிவை தான் இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம்.
அதற்கு முன் தென்னை மரத்தை பற்றி ஒரு சிறிய அறிவை பெறலாம்.
பெரும்பாலும் தென்னை மரத்தை, அனைவரும் கண்ணால் கண்டு இருப்போம். தென்னைக்கு நீர் ஊற்றினால், அது உயிருக்கு நீர் கொடுக்கும் என்று கூறுவார்கள். நம் முன்னோர்கள் சொன்னது சரியாகத் தான் இருக்கின்றது.
அது எவ்வாறு என்றால், ஒருவன் தென்னை மரத்தை நட்டு நீர் ஊற்றி வளர்க்கின்றான். சில காலம் கழித்து தென்னை மரமானாது நல்ல சுவை மிகுந்த இளநீரை கொன்ட தேங்காய்களை மரத்தில் காய்க்கின்றது.
மனிதனுக்கு தன் முதுமை பிராயத்தில், யாரும் அவனை காக்கவில்லை என்றாலும் அவன் வளரத்த தென்னை மரமானது அவனை காக்கின்றது. அதாவது அவனுக்கு இளநீரைத் தந்து அவனது உயிரைக் காக்கிறது
இது மட்டுமில்லாமல், தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் அனைத்து பொருள்களையும் நம் வாழ்விற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
இதிலிருந்து நாமும் ஒரு தென்னை கன்றை வளர்ப்போம் என்று உறுதி கொள்வோம்.
சரி. இனி தென்னை மரம் ஆனது ஒரு மனிதனுக்கு எவ்வாறு தொழிலை கற்றுத் தருகின்றது என்பதை இனி பார்க்கலாம்.
இப்போது நாம் தென்னை கன்றை எடுத்து கொள்வோம்.
தென்னை மரத்திலிருந்து பயனைப் பெற வேண்டுமெனில் முதலில் தென்னை கன்றை நிலத்தில் வைக்க வேண்டும். தென்னை கன்றை நிலத்தில் வைக்க முதலில் நாம் குழி தோண்ட வேண்டும்.
நாம் குழி தோண்டிய பிறகு அதில் சிறிய உரத்தை போட வேண்டும். உரமானது அதன் வளர்ச்சியை மேலோங்கச் செய்யும்.
பிறகு, தென்னை கன்று செடியை நிலத்தில் நடவேண்டும். அதன்பிறகு செடியை வைத்து விட்டு தோண்டிய மண்ணை வைத்து மூட வேண்டும். பிறகு தண்ணீரை ஊற்ற வேண்டும்.
ஆனால் இப்போது, தென்னை கன்றை வளர்க்கும் செய்முறையை கூறுகிறாயே, என்ற எண்ணமானது மனதில் தோண்றியிருக்கும்.
ஆம். இந்த தென்னை மரத்தை வளர்க்கும் செயல்முறையில் இருந்து தான், நாம் தொழிலை கற்றுக் கொள்ள போகிறோம்.
முதலில் நாம் தென்னை கன்றை வளர்க்க முதலில் தென்னை கன்றை வாங்குகிறோம் அல்லவா.
அதுபோலத் தான், நீங்களும் தொழிலை தொடங்குவதற்கு முன்பாக ஒரு தென்னை கன்று போலவே ஆவிர்கள். நான் தென்னை கன்றா? என்ன ஒன்றும் புரியவில்லையே! அப்படித்தான் இருக்கும் இதன் இறுதியில் அனைத்தும் விளங்கி விடும்.
நாம் தென்னை கன்றை வளர்க்க ஒரு இடத்தில் குழி தோண்டுகிறோம் அல்லவா?. அது தான் நாம் இந்த பறந்து விரிந்த உலகத்தில், நம் தொழிலுக்கான சரியான இடத்தையும் தேர்ந்தெடுக்கும் முறையாகும்.
அடுத்து, நாம் தென்னை கன்றை வைக்கும் முன் நிலத்தில் உரம் இடுகிறோம் அல்லவா. அச்செயலானது நமது தொழிலுக்கான அறிவுரையை பெறுதல் ஆகும்.
அப்போது தான் தொழிலில் வளர முடியும். தொழில் செய்வதற்கு முன்பாக, தொழிலைப் பற்றி அறிவை பெறுதல் அவசியமாகும். அப்போது தான் தொழிலை சிறப்பாக செய்ய முடியும்.
பிறகு மண்ணை முடி நீர் ஊற்றுவது, தென்னையை வளர்க்க உதவும். அதுபோல, தொழில் இறங்கியவுடன் தொடர்ந்து உழைக்க வேண்டும்.
தென்னையானது தனது பலனை அளிப்பதற்கு சில காலம் ஆவது போல, நாம் மேற்கோண்ட தொழிலானது வெற்றி அடைய சில காலம் தேவைப்படும். அதுவரை நாம் தொடர்ந்து மன ஊக்கத்தோடு உழைத்து கொண்டே இருக்க வேண்டும்.
இதிலிருந்து, தொழிலைப் பற்றிய அறிவை அடைந்து இருப்பீர்கள்.
இயற்கையிலிருந்து மனிதன் கற்று கொள்ள வேண்டிய அறிவானது, அளவற்றதாகும். இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்வே மகிழ்வை தரும்.
நன்றி.
-கவிதை குழல்