உடல்நிலையை அறி!
உடல்நிலையை அறியாத
பொய் நிலை கொண்டு
வாழ வேண்டாம்.
உடல்நிலை பற்றி
விழிப்போடு இரு.
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
பெரும்பாலும் நாம், நம் உடலானது ஆரோக்கியமாக இருக்கிறதா? என்று நினைப்பது கூட இல்லை.
இன்றைய சூழ்நிலையில், வாழ்வை வழிநடத்த வேண்டுமெனில், ஒடிக்கொண்டே இருக்க வேண்டிய சூழலானது உருவாகியுள்ளது.
இதற்கு எல்லாம் என்ன காரணம் என்று என்றாவது சிந்தித்தது உண்டா?
ஒரு மனிதனின் உடல் ஆனது இருக்க வேண்டுமெனில், அவனுக்கு உணவே மருந்தாக இருக்க வேண்டும்.
ஆனால், இன்றைய சூழ்நிலையானது மருந்தே உணவாக மாறிவிட்டது.
கால சூழலால் மருந்தானது உணவானதா? இல்லை மனிதர்களால் உருவானதா? சற்று சிந்தித்து பாருங்கள்.
நன்றி!
– கவிதை குழல்.