உறவுகளின் அன்பு எல்லையற்றது!
உறவுகளை விட்டு விலகி
செல்லும் நிலைக்கு
தள்ளப்பட்டு இருக்கிறோம்.
உறவுகள் நீடிக்க உண்மையாக
இருத்தல் வேண்டும்.
– கவிதை குழல்.
கவிதைக்கான விளக்கமும் அறிக:
உறவுகளின் அன்பு ஆனது ஒருவருக்கு கிடைக்கும் போது, அது எல்லையற்ற ஆனந்தத்தை ஏற்படுத்தும்.
ஆனால், இன்று குடும்பத்தில் ஒருவொருக்கொருவர் முகம் கொடுத்து கூட பேசாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.
இது ஏனென்று சற்று சிந்தித்தது உண்டா?. இதற்கு நேரத்தின் மீது தான் பழியை போடுகிறோம்.
ஒருவர் பணம் சம்பாதித்து, குடும்பத்திற்கு எத்தனை பொருட்கள் வாங்கி கொடுத்தாலும் அதனை விட மகழ்ச்சி அளிப்பது குடும்பத்தில் உள்ளோரிடம் மனம் விட்டு பேசுவதே ஆகும்.
குடும்பத்தாரிடம் நெருக்கம் இல்லாமலிருந்து என்ன செய்ய போகிறோம்?
உறவுகளின் அன்பை பெற உண்மையாக நடந்து கொள்ளுங்கள்.
நன்றி!
– கவிதை குழல்.