எதிர்காலம்!
எதிர்காலம் என்று ஒன்று இல்லாதவரை
எவ்வளவு மகிழ்ச்சி இந்த வாழ்வில்…
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
வணக்கம்!
அனைவரும், எதிர்காலம் நலமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, எதிர்காலத்திற்காகவே உழைக்க ஓடிக் கொண்டிருக்கிறோம்.
உண்மையில் ஒரு மனிதனின் ஒரு நாள் எவ்வாறு உருவாகிறது என்றால், நேற்று என்ன நடந்ததோ அதனை தொடர்ந்தே அடுத்து நாளும் உருவாகின்றது.
அதாவது நேற்று ஆரம்பித்த செயலின் தொடர்ச்சி தான், இன்றைய நாளின் செயல் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
மனதில் ஒரு கேள்வி எழலாம்.
நான் எனது எதிர்கால தேவைக்காக உழைக்க கூடாதே என்பதே.
நிச்சயம். உழைக்க வேண்டும்.
ஆனால், எதிர்கால வாழ்வு என்பது வேறு. எதிர்காலத்திற்காகவே வாழ்தல் என்பது வேறு.
இவற்றிற்கு இடையேயான வேறுபாட்டை புரிந்து செயலாற்ற செயலாற்றுங்கள்!
நன்றி.
– கவிதை குழல்.