கணவனின் அன்பு!
கணவனின் அன்பு!
ஆறு ஆறு அச்சு
இருட்டு ஆகி போச்சு
எங்க புள்ள நீ இருக்க
விளக்கு வைக்க நேரம் ஆச்சு
வேல முடிஞ்சி உடல் களைப்போட
வீட்டுக்கு வருவ
உனக்காக உணவு சமைச்சு
நான் உன்னுடன் சேர்ந்து உண்ண
வழி மேல விழி வைத்து
நான் உனக்காக
காத்திருக்கேன் புள்ள!
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
எல்லோரும் ஆண் வேலைக்கு சென்று, பெண் வீட்டில் இருந்து கணவனுக்காக காத்திருக்கும் நிகழ்வை அறிந்திருப்பீர்கள். ஆனால்,தற்போது காலம் மாறிவிட்டது அல்லவா.
ஆண் ஆனவன் தன் மனைவிக்காக வீட்டில் காத்திருக்கும் நிகழ்வை கிராமிய நடையில் இக்கவிதை எடுத்துரைக்கிறது.
இல்வாழ்க்கையின் இன்பத்தை அனுபவியுங்கள்!
நன்றி.
– கவிதை குழல்.