கண்ணியம் கற்பிப்பது?
கண்ணியம் என்ற நிலைமாறி
கயவன் என்ற நிலைக்கு செல்வது
இறுதியில் துன்பத்தையே தரும்.
– கவிதை குழல்.
கவிதைக்கான விளக்கமும் அறிக:
ஒவ்வொரு மனிதனும் தனது கடமையை சரிவர செய்தால் எவருக்கும் பிரச்சனையானது இவ்வுலகில் உருவாகாது.
அது எவ்வாறு என்றும் கேட்பீர்கள்.
உண்மையில் ஒவ்வொரும், நாம் செய்யும் அன்றாட பணிகளை செய்யக்க்கூட காலம் தாழ்த்துகிறோம் அல்லவா.
நமது பங்கானது சமூகத்தில் என்னவென்று, சற்றும் பொறுப்பில்லாமல் தனது செயலை செய்ய சோம்பல் கொள்கிறோம்.
சோம்பலிருந்து விடுபட தக்க சன்மானத்தையும் எதிர்பார்க்கிறோம். இதன் விளைவாக ஒரு மனிதன் தனது கண்ணியத்தை இழக்கிறான்.
கண்ணியத்தை இழப்பவனும், கயவனும் ஒன்றே.
சிந்தித்து செயலாற்றுங்கள்.
நன்றி!
– கவிதை குழல்.