கற்றலின் நோக்கம்!
கல்வி கற்றலின் நோக்கம்
தனது திறமையை
வெளிக்கொணர்ந்து
தன் குடிமக்களுக்கு,
நன்மை பயக்கும் வகையில்
இருத்தல் வேண்டும்.
– கவிதை குழல்.
கவிதைக்கான விளக்கமும் அறிக:
கல்வி, ஒரு மனிதனுக்கு தன் அறிவை மேம்படுத்திக் கொள்ள உதவுவதோடு மட்டுமில்லாமல், தனது வாழ்க்கையை நல்வழியில் பயணிக்கவும் உதவும்.
கல்வியின் மூலம் தனி ஒருவன் பயன் அடைவதோடு மட்டுமில்லாமல், தனது அறிவால் அனைத்து குடி மக்களுக்கும் மேம்பட உதவ வேண்டும்.
நாட்டிலுள்ள குடிமக்களின் வளர்ச்சி தான் ஒரு நாட்டின் வளர்ச்சி என்பதை உணர்ந்தாவது அனைத்து குடிமக்களுக்கும் தன் கல்வியால் நன்மையை செய்ய முன்வர வேண்டும்.
நன்றி.
– கவிதை குழல்.