கற்றலின் பயன் யாதென்று அறிவோம்!
கிடைக்கும் நேரத்தை
சரியாக பயன்படுத்த
கற்றுக்கொள்ள வேண்டும்.
கற்றலின் பயன்
உன்னை காக்கும்.
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
உலகத்தில் பிறந்த அத்தனை மனிதர்களுக்கும் நேரம் என்பது ஒன்றேயாகும்.
சிலர் மட்டும் எவ்வாறு நேரத்தை சரியாக பயன்படுத்தி வெற்றி கொள்கிறார்கள் என்று சிந்தித்தது உண்டா?
நேரம் என்பது ஒரு நாளை கணக்கிட்டு வரையறுக்கப்பட்டதாகும்.
ஆனால், ஒவ்வொருவரும் மேற்க்கொண்ட முயற்சியின் கால அளவானது வேறுப்படும்.
இருந்தாலும், தனது செயலுக்கு ஏற்ப நேரத்தை பயன்படுத்த கற்றுக்கொண்டால், அதனால் கிடைக்கும் பலன் ஏராளமாகும்.
நேரத்தை சரியாக பயன்படுத்துவதே ஒரு கலை தான்.
அக்கலையை பயின்று கற்றலின் பயனை அடையுங்கள்.
நன்றி…
– கவிதை குழல்.