கல்வி பயணம்!
கல்வி பயணம்!
சில சிரிப்புகள்
சில எதிர்பார்ப்புகள்
சில கற்றல்கள்
சில சிந்தனைகள்
சில செயல்கள்
சில அனுபவங்கள்
சில நினைவுகள்
இவை எல்லாம் கலந்திருக்கிறதே
கல்வி பயணத்திலே…
– கவிதை குழல்.
கவிதைக்கான விளக்கமும் அறிக:
வணக்கம்!
கல்வி கற்க வேண்டியது என்பது ஒரு மனிதனின் தலையாய கடமையாகும்.
கல்வி மூலம் மட்டுமே ஒரு மனிதன் சிந்திக்க துவங்குகிறான்.
சிந்தித்தால் மட்டும் தான் சமுதாயத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க முடியும்.
கல்வி பயணத்தில் கிடைக்கும் அறிவானது வாழ்வின் பல சூழ்நிலைகளை சமாளிக்க ஊன்று கோலாக உதவுகிறது.
ஆதால், கல்வி பயணத்தை தொடங்குக…
நன்றி!
– கவிதை குழல்.