கவிதைகள் – இயற்கை | Kavithai Kuzhal – Tamil Kavithaigal

இயற்கை கவிதைகள்…

வணக்கம்!

இயற்கை பற்றிய முன்னுரையை முதலில் பார்க்கலாம்.

இயற்கை என்ற சொல் கேட்டாலே அனைவரது உள்ளத்திலும் மகிழ்ச்சியானது பொங்கும்.

அதற்கு காரணம் என்னவென்றால், இயற்கை சூழலில் நிறைந்திருக்கும் பசுமையே ஆகும்.

மரம்,செடி,கொடிகள் அனைத்திலும் பசுமை காணும் போது அனைவரது உள்ளத்திலும் மகிழ்ச்சியானது பொங்கும்.

பசுமை இருந்தால் தான் விவசாயிகளின் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கும்.

ஏனென்றால் விவசாயிகள் பயிரிட்டு அதனை அனைவருக்கும் உணவாக கொடுக்கின்றனர் அல்லவா!.

அவ்வாறு பயிரிடும் போது அது காய்ந்து விட்டால் மகிழ்ச்சி இல்லாமல் போய்விடும் தானே.

பசுமையானது உண்டாவது எவ்வாறென்றால் நீர் இருப்பதனாலேயே.

நீரானது ஏரி, குளம், குட்டை, கிணறு, ஆறு, கடல் ஆகிய அனைத்து நீர்நிலைகளிலிருந்தும் விவசாயத்திற்கு கிடைக்கின்றது.

இவற்றிலிருந்து எல்லாம் கிடைப்பதற்கு  மழையே மூலக்காரணம் ஆகும்.

மழை பொழிந்தால் மட்டும்தான் நாட்டு மக்களும் மற்றும் நாடானது செழிப்படையும்.

இயற்கைச் சூழலில் நிறைந்திருக்கும் பறவைகளின் கூடுகள், பறவைகளின் ஓசைகள் இவையெல்லாம் பெரிதும் மகிழ்ச்சியைத் தரவல்லன.

ஒரு மனிதன் இயற்கைச் சூழலில் வாழ்வதற்கும் நகரச் சூழலில் வாழ்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

இயற்கைச் சூழலே மனிதனுக்கு பெரிதும் ஆனந்தத்தை ஏற்படுத்தும்.

இயற்கையானது உயிரினங்கள் வாழத் தேவையான அனைத்து சூழலையும் உருவாக்கித் தருகிறது.

இயற்கையானது தன்னுடைய சூழலையும் தானே சரிசெய்யும் வல்லமை உடையது.

இயற்கை உண்டாக்கும் ஒவ்வொரு பிரச்சனையையும் மனிதர்களுக்கு ஒற்றுமையை கற்றுத் தருகின்றது.

புவியில் மக்கள் வாழ வேண்டுமெனில் இயற்கை காப்பாற்றுவதும் அவசியமாகும்.

இயற்கையானது நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் போன்ற பஞ்சபூதங்களை உள்ளடக்கியதாகும்.

இவ்வாறு இயற்கையானது ஒரு பல்தன்மை கொண்ட அங்கமாகும்.

இயற்கையை நேசிப்போம்! இயற்கையைப் பேணி காப்போம்!

இயற்கையானது உலக உயிர்களுக்கு செய்யும் நன்மையையும் மற்றும் மனிதனானவன் இயற்கைக்கு செய்ய வேண்டிய கடைமையும் பற்றி இந்த “இயற்கை கவிதைகள்” என்ற பிரிவின் வாயிலாக நாம் காணலாம்.

இயற்கை கவிதைகள்:

1.வாழ்க!

இசை பாடும் குயில் ஓசை கேட்க

இதம் தரும் குளிர் காற்று பெற

இன்பம் பயக்கும் வாழ்வு அடைய

இயற்கை சோலையில் வாழ்க!

– கவிதை குழல் 

 

2.மண்வாசனை

தென்றல் காற்று வீச

மண்ணில் மழைத்துளி தழுவ

மண் வாசனை எழும்புகிறதே

நம்ம வயக்காட்டுல.

– கவிதை குழல்

 

3.இயற்கையின் அன்பு

இயற்கையானது தனது அன்பை 

அனைவருக்கும் பாரபட்சம் இல்லாமல் வழங்குகிறது.

– கவிதை குழல்

 

4.ஆக்கமும் அழிவும்

இயற்கையானது ஆக்கத்தையும் ஏற்படுத்தவல்லது.

அழிவையும் ஏற்படுத்தவல்லது.

– கவிதை குழல்

 

5.ஒரு அங்கமே!

இயற்கையில் மனிதன் ஒரு அங்கமே ஆவான். 

ஆதலால் இயற்கையானது அனைத்து உயிரினங்களுக்கும் 

சொந்தம் என்பதை உணர வேண்டும்.

– கவிதை குழல்

 

6.உரிமையில்லை!

இயற்கைப் படைப்பில் உள்ள ஒவ்வொரு உயிர்களுமே முக்கியத்துவம் வாய்ந்தவை.

எவற்றையும் அழிக்க மனிதனுக்கு உரிமையில்லை.

– கவிதை குழல்

 

7.பாதுகாப்பு

மனிதனானவன் இயற்கையை பாதுகாக்கவிடில், 

இயற்கையானது அவனை பாதுகாக்காது.

– கவிதை குழல்

 

8.இயற்கை வாழ்க்கை

இயற்கையை ஒன்றிய வாழ்க்கையே 

உலக உயிர்களுக்கு மகிழ்ச்சியை தரும்.

– கவிதை குழல்

 

9.காற்று

சுவாசிக்கும் காற்றுக்காக 

மரங்களை வளர்க்கவேண்டும்.

வளர்க்காவிடில் காற்றானது இல்லாமல் போகும்.

– கவிதை குழல்

 

10.சுமையல்ல.

இயற்கையானது தனது சுமையைத் தாங்கிக் கொள்வது போல,

மனிதர்களும் இயற்கை காக்கும் சுமையை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

– கவிதை குழல்.

நன்றி!

One thought on “கவிதைகள் – இயற்கை | Kavithai Kuzhal – Tamil Kavithaigal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *