புரட்டாசி 2020 – புரட்டாசி மாத சிறப்பு கவிதை !
புரட்டாசி 2020 | புரட்டாசி மாத சிறப்பு கவிதை:
புரட்டாசி மாதத்தால்
புவியில் மழை பொழிய
புவியானது குளிர்வடைய
நோய் கிருமிகள் மிக
உடலானது பாதிப்படையாமல் தடுக்க
துளசி நீர் பருகி
விரதம் இருந்து
மகா விஷ்ணுவை வழிபட்டு
வாழ்வில் நலனை அடைவோம்!
– கவிதை குழல்
கவிதை விளக்கம்:
புரட்டாசி 2020 – புரட்டாசி மாத சிறப்பு:
வணக்கம்!
புரட்டாசி மாதம் என்றாலே காற்றோடு மழையும் பெய்யும் காலமாகும்.
புரட்டாசி மாதம் இறைவன் மகா விஷ்ணுக்கு உகந்த காலமாகும்.
புரட்டாசி மாத சிறப்பு என்னவென்றால், தமிழகத்தில் மக்கள் அனைவரும் இந்த மாத்த்தில் விரதம் இருந்து திருமாலை வணங்குவர்.
இறைவனை வணங்குவதன் மூலமாக வாழ்வில் நன்மைகளை அடையலாம்.
புரட்டாசி மாதம் ஆனது மழை பொழியும் காலம். ஆதலால் புவியானது அப்போது தான் குளிர்ச்சி அடைய தொடங்கும்.
இதனால் மண்ணில் இருக்கும் வெப்பானது வெளிப்படும். இந்த வெப்பம் ஆனது உடலுக்கு கோடைக்காலத்தில் ஏற்படுத்தும் பாதிப்பை விட இக்காலத்தில் அதீத பாதிப்பை ஏற்படுத்தும்.
இதன் காரணமாக வயிற்றில் செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே தான், புரட்டாசி மாதத்தில் அசைவ உணவு சாப்பிடக் கூடாது என்று கூறுகிறார்கள்.
இம்மாதத்தில் சூட்டால் உடல் பாதிப்பை தடுக்க, துளசி நீர் பருக வேண்டும்.
நம் முன்னோர்கள் காலத்தை கணித்து, உடல் நலத்தை காக்க, புரட்டாசி மாதத்திற்கு உகந்த கடவுளான பெருமாளை, விரதம் கடைபிடுத்து வழிபட வழிவகுத்தனர்.
தமிழினம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஒரு பலன் இருக்கிறது என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.
நன்றி!
– கவிதை குழல்