எறும்பின் முயற்சி | Motivation | Kavithai Kuzhal
எறும்பின் முயற்சி | Motivation | Kavithai Kuzhal
வணக்கம்!
எறும்பின் முயற்சி என்று என்ற தலைப்பை எடுத்துக்கொண்டு எறும்பிலிருந்து மனிதனானவன் கற்றுக்கொள்ளவேண்டிய அறிவை தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
உலகில் பிறந்த அத்தனை உயிர்களும் மகத்துவம் வாய்ந்தவை. ஐந்தறிவு உடைய ஜீவராசியாக இருந்தாலும் சரி, ஆறறிவு உடைய மனிதனாக இருந்தாலும் சரி, அனைத்து உயிர்களுமே மகத்துவம் வாய்ந்தவை தான்.
உண்மையில் மனிதனானவன் சிந்திக்கக்கூடியவன் ஆவான். அவன் சிந்தனையானது மற்ற உயிர்களை விட மேலோங்கி இருந்ததால் அனைத்து உயிர்களையும் அவன் ஆராயத் தொடங்கினான்.
அப்படிப்பட்ட ஆய்வின் மூலமாக தான், மனிதன் தனக்கான மகத்துவமான அறிவை அடைய தொடங்கினான்.
முயற்சிக்கு உருவமானது தடையில்லை என்பதை இன்று முதல் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.
எறும்பு என்ற உயிரினத்திலிருந்து மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தை இனி காண்போம்.
எறும்பு ஒரு உயிரினமாகும். எறும்பினது வாழ்நாள் ஆனது மனிதனை விடக் குறைவு தான். ஆனால் தான் வாழும் காலத்தில் எத்தனை பெரிய ஆற்றல் மிகுந்த செயல்களை செய்கின்றன என்பதைக் கண்டால் நாம் வியந்து நிற்போம்.
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் பசியினால் வாடினாலும் எறும்பு ஆனது பசியினால் வாடுவதில்லை. ஏனென்றால் எறும்பானது, தனக்குத் தேவையான உணவை முன்னரே சேமித்து வைத்துக் கொள்கிறது.
தான் வாழும் இடத்தில் சேமித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் போது உணவை பயன்படுத்திக் கொள்கிறது.
சேமிக்க வேண்டும் என்றால் ஏதாவது ஒரு பொருளானது நம்மிடத்தில் இருத்தல் வேண்டும். ஆனால் எறும்பானது எவ்வாறு உணவை சேமித்து வைக்கிறது என்றால் அதன் உழைப்பால் தான்.
எந்த ஒரு செயலையும் முடியாது என்று கொள்ளாமல் எறும்பைப்போல் எந்த காரியமும் சாத்தியமாகும் என்று எண்ணி செயலை தொடர்ந்து செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்த்தது நமக்குக் கிடைக்கும்.
எறும்பானது எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படும். அந்த சுறுசுறுப்பு தான் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாகவும் இருத்தல் வேண்டும். சுறுசுறுப்பாக இருந்தால் மட்டுமே மேற்கொண்ட செயலை சிறப்பாக செய்ய முடியும்.
இவற்றிற்கு எல்லாம் முன் எந்த ஒரு வேலையும் செய்வதற்கு முதலில் மன ஊக்கமானது அவசியமாகும். அப்போது தான் செயலையை தொடங்க முடியும்.
எறும்பானது, தனது முயற்சியால் தனக்குத் தேவையான உணவை தேடி வைத்துக் கொள்வது போல மனிதர்களும் தனது எதிர்கால தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக சேமிப்பினை தொடங்குதல் வேண்டும். அப்போது தான் வாழ்வை மகழ்ச்சியாக வாழ முடியும்.
எங்கிருந்து கற்கிறோம் என்பது முக்கியம் இல்லை. என்ன கற்கிறோம் என்பதே முக்கியமாகும்.
எறும்பிலிருந்து மனிதன் கற்றுக்கொள்ள வேண்டியதை, இனி கவிதைகளின் வாயிலாக காண்போம்.
1.எறும்பினை போல் சுறுசுறுப்பாக இருந்தால் தான்,
மேற்கொண்ட செயலை விரைவாக முடிக்க முடியும்.
2. எறும்பினை கண்டாவது எதிர்காலத்திற்காக சேமிக்க பழகு.
3.எறும்பினைப்போல் இனத்தோடு சேர்ந்து வாழ பழகிக்கொள்.
4.வாழும் காலம் குறைவாக இருந்தாலும், வாழ்ந்த காலத்தில்
செயற்கரிய செயல்களை செய்ய வேண்டும்.
5.உயிர்களில் உயர்ந்தது, தாழ்ந்தது என எதுவுமில்லை.
அனைத்து உயிர்களும் சமம்தான் என்பதை ஏற்றுக் கொள்.