முயற்சி செய் கவிதை | Kavithai Kuzhal – Motivational Quotes
முயற்சி செய் கவிதை | Kavithai Kuzhal – Motivational Quotes
வணக்கம்!
இக்கவிதையானது தனி மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக மட்டுமல்லாமல், தமிழனின் பெருமையை கூறி தமிழானவன் முயற்சியை மேற்கொண்டு வெற்றி கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டில் தமிழின் பெருமை கூறுவதற்காக பல நூல்கள் இருந்தும், அதன் பொருள்களை இன்னும் தான் நாம் உணராமல் இருக்கின்றோம்.
நூல்களைப் படித்தால் மட்டும் தான் அதன் மூலம் அறிவு வளர்ந்து புதிய சிந்தனையானது மனதில் உருவெடுக்கும்.
அந்த சிந்தனையை வைத்துக்கொண்டு தமக்கான செயலை மேற்கொண்டால் அதில் எளிதாக வெற்றி அடைய முடியும்.
வாழ்வின் உண்மை பொருளை உணர்த்துவதற்காக ஏராளமான தமிழ் நூல்கள் இன்றும் நம்மிடத்தில் உள்ளன. ஆனால் அதில் இடம் பெற்றுள்ள தூய தமிழ் வார்த்தைகளை புரிந்து கொள்வதற்கு கடினமாக இருப்பதால் அதை நம் வாழ்விலிருந்தே விலக்கி வைத்து விட்டோம்.
பெரும்பாலும் நம்மிடத்தில் தமிழை பயில்வதற்கு ஆர்வமானது இன்று குறைந்து விட்டது. ஏனென்றால் உலக அளவில் ஏற்படும் மாற்றமானது மற்ற மொழிகளிலயே அதிகமாக வெளிவருகின்றது அல்லாவா?.
நாம் தமிழ் மொழியில் உள்ள நூல்களை மட்டும் கற்று கொண்டால் போதாது. பிறமொழியில் உள்ள உன்னத பொருள் கொண்ட நூல்களையும் கற்றுக்கொள்ள வேண்டும்.அப்போது அறிவானது மேலும் வெளிப்படும்.
அறிவின் துணையால் மட்டுமே நாம் எதையும் சாதிக்க முடியும். சாதித்தால் மட்டுமே தன்னுடைய புகழும் ,தன்னுடைய மொழியின் புகழையும் உலகிற்கு எடுத்துரைக்க முடியும்.
இதன் மூலம் ஒரு நாட்டின் வளர்ச்சி கூட மாறுபடும். ஒரு நாட்டில் உள்ள பழமையான கலாசார நிகழ்வுகளை வைத்தே அந்த நாட்டின் புகழானது உலகில் ஓங்கி நிற்கும்.
ஒரு நாட்டின் புகழை பொறுத்தே அந்த நாட்டிற்கான பொருளாதார வளர்ச்சியும் அமைந்திருக்கும்.
புதிய சிந்தனை கொண்டு புதுப்புது கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினால் மட்டுமே நாட்டின் வளர்ச்சியும் ஓங்கும் தனி மனிதனுடைய வளர்ச்சியும் ஓங்கும் மக்களும் நலமாக வாழ்வார்கள்.
புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டுமென்றால் முயற்சியானது அவசியமாகும். கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதற்கு ஏராளமான மனிதர்கள் இருந்தாலும் தமிழன் அவன் பல ஆண்டுகளுக்கு முன்பே பல தத்துவங்களை உலகிற்கு எடுத்துரைத்துள்ளான்.
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து இளைஞர்களும் தங்களுடைய திறமையின் மீது நம்பிக்கை கொள்ளாமல் கிடைத்த வேலையை செய்து கொண்டு தங்களுடைய வாழ்வை அழித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஏனென்றால் இதற்கு முக்கிய காரணம் குடும்பத்தின் பொருளாதார நிலையே ஆகும்.
குடும்பத்தை நிலைமை எவ்வளவு உழைத்தாலும் மாறவில்லை என்று கவலை கொள்ளாமல் தங்களுடைய திறமையை அடிப்படையாகக் கொண்டு முன்னேறி அதன் மூலமாக மட்டுமே சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்த முடியும்.
தன்னுடைய சுய வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும.
இனியாவது ஒவ்வொருவரும் தங்களின் திறமையை கண்டு அதன் மூலம் செயலை மேற்கொண்டு வெற்றி அடைய வேண்டும்.
இப்போது காணவிருக்கும் கவிதையானது தனி மனிதனுக்கு ஊக்கமளிக்கும் வகையில் முயற்சி செய் என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
காணுங்கள்; மாற்றத்தை ஏற்படுத்துங்கள்!.
முயற்சி செய்! – கவிதை
வாழ்வுக்கும் வேர்வைக்கும்
மானம் போகிறேதே!
உன் பெருமை அறியாமல்
உன் திறமை புரியாமல்
தலைவிதி என்று சொல்லி
திரிகிறாயே!
உன்னுள் இருக்கும்
வீரமும் விவேகமும்
யாரிடமும் இல்லையே என்று
நீ எப்போது உணர்வாயோ!
காலத்தின் வளர்ச்சியும்
கவலையாய் மாறுதே!
கண்களை கலக்கினால்
கண்டம் தானே பரவுமோ!
முயற்சியை தொடங்கினால்
எதுவும் தான் இயலுமே!
தொடக்கத்தை தொடங்கி
புகழ் மாலை சூடி வா! தமிழா.
-கவிதை குழல்