முயற்சி செய்வோம்! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal

முயற்சி செய்வோம்!| Kavithai Kuzhal – Tamil Kavithaigal

வணக்கம்!

ஒருவன் முயற்சி மேற்கொண்டால் எப்பயனை அடைவான் என்பதை “முயற்சி” தலைப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளை காணும் போது புரிந்து கொள்ளலாம்.

முதலில் முயற்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வோம். பிறகு கவிதை குழல் கவிதைகளை காணலாம்.

முயற்சியானது மனிதனை இவ்வுலகில் தனித்துகாட்டவல்ல வல்லமை வாய்ந்தது.

முயற்சி செய்தால் தான் எந்த ஒரு செயலிலும் வெற்றி பெற முடியும்.

ஒரு செயலை தொடங்கியவுடன் சிலருக்கு வெற்றி கிடைத்து விடும்.

ஆனால், அனைவருக்கும் இது சாத்தியமாகாது.

வெற்றி பெறுவதற்கு காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

செயலை மேற்கொள்பவருக்கு செயலுக்கு ஏற்ற கருவியும் இருத்தல் வேண்டும்.

அப்போது தான் முயற்சி மேற்கொள்ளும் போது வெற்றி அடைய முடியும்.

நான் முயற்சி மேற்கொண்டு விட்டேன.எனக்கு இன்னும் வெற்றி கிடைக்கவில்லை என்று வருந்துதல் கூடாது.

இதனால், இதுவரை செய்த செயலை விட்டு மற்றொரு செயலுக்கும் செல்லுதல் கூடாது.

எந்த செயலை முயற்சிக்கும் போதும்அதன் வரையறையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

.அப்போது தான் அச்செயலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை உணர முடியும்.

வரையரை அறியமால், செயலை செய்தால் எவ்வித பயனும் கிடைக்காது.

ஒரு செயலை தொடங்கி விட்டு, சிறிது காலம் உழைத்து விட்டு, முயற்சியை நிறுத்தினால் உழைத்த உழைப்பிற்கும் பலன் இல்லாமல் போய்விடும்.

எனவே மேற்கொண்ட செயலை இடைவிடாது முயற்சிக்க வேண்டும்.

இளைஞர்கள் அனைவரும் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் முயற்சி கொள்ள வேண்டும்.

ஒரு செயலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

சரி. இப்போது முயற்சிக்கும் செயலுக்கும் உள்ள தொடர்பை ஒரு உதராணத்தின் வாயிலாக பார்க்கலாம்.

ஒரு நூலகத்திற்கு நாம் செல்வோம் என்றால் புத்தகம் படிப்பதற்காக தான் இருக்கும்.

நூலகத்தில் எண்ணற்ற புத்தகங்கள் இருக்கும். 

நாம் படிக்க விரும்பிய புத்தகத்தை தேர்ந்தேடுப்பதற்காகவே அங்கு பலகையில் புத்தகங்கள் பெயர் மற்றும் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு வைத்திருப்பார்கள்.

இவ்வாறு பெயர் மற்றும் இடத்தை குறிப்பிடாவிடில், புத்தகங்களை தேடுவதில் கால விரயம் ஏற்படும்.

இதுபோலத்தான் நாம் எந்த செயலை செய்யும் போதும், விரைவாகவும், முயற்சி மேற்கொள்ளும் போது செயலுக்கான தெளிவும் இருத்தல் வேண்டும்.

அப்போது தான், நாம் முயற்சியை மேற்கொள்ளும் போது வெற்றி அடைய முடியும்.

இதன் மூலம் முயற்சியை பற்றிய தெளிவானது மனதில் உருவாகியுருக்கும்.

இனி,தனி மனிதனுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் “விடாமுயற்சி” என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள கவிதை குழலின் கவிதைகளை காணுங்கள்.

1.தன்னம்பிக்கை கொள்!

எண்ணமும் செயலும்

ஒன்றிணைந்தால்

உன் வெற்றியை

தடை செய்ய

யாருமில்லை.

-கவிதை குழல்

2.கனவை நினைவாக்குங்கள்! 

கற்பனையில் நிகழ்த்துவதை

நிகழ்காலத்தில் நிகழ்த்தி

காட்டுவது சாலச் சிறந்தது.

– கவிதை குழல்

3.உன்னால் முடியும்!

உனக்கானதை அடைய

உன்னால் மட்டும் தான் முடியும்.

-கவிதை குழல்

4.மனத்தெளிவு கொள்!

முயற்சியை மேற்கொள்ளும் போது

நிதானத்துடன் செயல்பட வேண்டும்.

நிதானத்துடன் செயல்பட்டால் தான்

மனத்தெளிவு பிறக்கும்.

தெளிவு உண்டானால் தான்

செயலை சரிவர செய்ய முடியும்.

-கவிதை குழல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *