வெற்றி – கவிதை | Motivational Quotes – Kavithai Kuzhal

வெற்றி – கவிதை | Motivational Quotes – Kavithai Kuzhal

வெற்றி கிட்டும்!

ஒரு பறவையோ தனது சிறகுகளை

மெது மெதுவாகத் விரித்து தான்

வானத்தின் உயரத்தை அடைகிறது.

அதுபோலத் தான், மனிதா!

வெற்றியும் படிப்படியாக தான்

உன்னை வந்தடையும்.

– கவிதை குழல்

கவிதை விளக்கம்:

வணக்கம்!

இக்கவிதையானது பறவையை உவமையாகப் கொண்டு பறவையின் செயலுக்கும், மனிதனின் செயலுக்கும் உள்ளே வெற்றி கிட்டும் தொடர்பை ஒருங்கிணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது ஆகும்.

வெற்றி என்பது எல்லோரும் அடைய வேண்டும் என்று எண்ணுவது தான். ஆனால் அது எளிதில் கிடைப்பதில்லை.

உலகில் வெற்றி பெற்றவர்களாக கருதப்படும் அனைவருமே ஒரு நாளில் வெற்றியை அடைந்தது இல்லை.

வெற்றி என்பது பல நாட்கள் உழைத்த உழைப்பிற்கு கிடைத்த பலன் ஆகும்.

ஒவ்வொருவரும் எடுத்து உடன், நான் வெற்றியடைய வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறோம். ஆனால் இது அவ்வளவு எளிதான காரியமில்லை.

ஒரு செயலை தொடர்ந்து பயிற்சி செய்து வருவதால் மட்டுமே அச்செயலை சிறப்பாக செய்ய முடியும்.

எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய பயிற்சியானது மிக அவசியமாகும்.

உதாரணமாக கணினியில் பணி புரிபவரை களத்துமேட்டில் பணிபுரிய சொன்னால் அவர்களின் வேலையில் தடுமாற்றம் மற்றும் தாமதமானது ஏற்படும்.

முதலில் எந்த ஒரு செயலையும் கற்றுக் கொள்வதாக இருந்தாலும் கடினமாகத்தான் தோன்றும்.

ஆனால் இவ்விருவர்களும் தொடர்ந்து பயிற்சியைத் தொடங்கினால், செய்யும் செயலை சரிவர செய்ய முடியும்.

செய்யும் செயலுக்கு பயிற்சி அவசியம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரு செயலுக்கான பயிற்சியை கற்றுத் தேர்ந்து விட்டு, உடனே அதை செயலில் பயன்படுத்த வேண்டும்.

பயிற்சியை பயன் படுத்தியவுடன் தான் அதில் நாம் எவ்வளவு சிறந்த விளங்குகின்றோம் என்பதை நம்மால் உணர முடியும்.

பயிற்சியை பயன் படுத்தியவுடன் வெற்றியடைய வேண்டும் என்பது சரியல்ல.

தான் மேற்கொண்ட செயலில் எனக்கு வெற்றியானது கிடைக்கவில்லை எனக் கருதி அச்செயலை விட்டு விலகுதலும் கூடாது.

எந்த ஒரு செயலாக இருந்தாலும் அச்செயல் ஆனது அனைவருக்கும் சென்றடைய சிறிது காலம் ஆனது தேவைப்படும்.

வெற்றி கிடைக்கவும் சிறிது காலம் ஆனது தேவைப்படும் என்பதை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

எனவே தான், வெற்றியடையும் செயலானது பறவையானது பறக்கும் செயலோடு இங்கு ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளது.

ஒரு பறவையானது பிறந்து, சிறிது காலம் வளர்ந்து, தன் உடல் மற்றும் மனதிற்கு வலுவூட்டி, தனது சிறகுகளை மெதுமெதுவாக விரித்து தான் வானத்தில் பறக்க துவங்குகிறது.

அதுபோலத்தான் மனிதனும் எச்செயலை ஆரம்பித்தாலும் அதில் முதலில் உயரத்தை அடைய முடியாது.

தான் மேற்கொண்ட செயலை தொடர்ந்து மன வலிமையுடன் செய்து கொண்டு வரவேண்டும்.

செயலில் செய்யப்படும் சிறுசிறு நுணுக்கங்களும் அவனுக்கு வெற்றிக்கனியை பறிக்க உதவும்.

எடுத்தவுடன் வெற்றி கிடைக்கவில்லை என்று வருந்தாமல், செய்யும் செயலில் கவனத்தை செலுத்தி படிப்படியாகத்தான் வெற்றியானது வந்தடையும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவேதான் ஒரு பறவையானது வானத்தில் பறக்கும் செயலை, மனிதன் தன் முயற்சி மூலம் மேற்கொள்ளும் செயலோடு ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளது.

வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் எனில் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டே இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்க.

நன்றி!

–  கவிதை குழல்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *