காத்திருப்பாயா என்னவளே!
காத்திருப்பாயா! – காதல் கவிதை:
என்ன மாயம் செய்தாளோ
என் மனதில் வந்தாளே!
மாலை நேர பொழுதினிலே..
மௌன மொழியில்
சுகம் அடைய செய்தாளே!
உன் கரம் பிடிக்க
வெகுநாட்கள் உள்ளதே!
எனக்காக சிறு காலம்
காத்திருப்பாயா!
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
காதல் என்ற உணர்வால் ஒன்றிணைய துடிக்கும் இதயங்களின் காதல் நிகழ்வு தான் இக்கவிதை.
ஆண் ஆனவன் தன் காதலை வெளிப்படுத்த, பெண் ஆனவள் அதனை ஏற்றுக்கொள்ள, இணைய வேண்டிய வயதோ இன்னும் வரவில்லை.
வாழ்வின் முறைகளை கற்றுக்கொண்டால் மட்டும் தான் இல்லற வாழ்வை மகிழ்ச்சியாக வாழ முடியும்.
காதல் கொண்ட உடன் இருவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தான் ஆவல் கொள்வார்கள்.
வாழ்வு என்பது சிறு நொடியில் முடிந்து விடுவதில்லை. ஆதாலால் தான், பெற்றோர்கள் காதல் கொண்ட உடன் திருமணம் செய்ய தயங்குகின்றார்கள்.
வாழ்வின் புரிதல்களை ஆணும், பெண்ணும் அடைந்த பின்னே இணைய வேண்டியது தான் யாவருக்கும் நலத்தை நல்கும்.
சிறுகாலம் காத்திருங்கள்!
நன்றி…
– கவிதை குழல்.