கோபம் கொள்ளாதே! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
கோபம் கவிதை – கோபம் கொள்ளாதே!
நிதானம் என்ற நீரைக் கொண்டு
கோபம் என்ற அக்னியை
தணித்திடுதல் நன்று.
– கவிதை குழல்
கவிதை விளக்கம்:
கோபம் கவிதை – கோபம் கொள்ளாதே!
வணக்கம்!
கோபம் என்பது ஒரு உணர்ச்சி ஆகும். கோபமானது அறிவை இழக்க செய்து பல தவறான காரியங்களை செய்யத் தூண்டுகின்றது.
உண்மையில் பிரச்சனை இல்லாதவர்கள் யாரும் இல்லை. பிரச்சினைகள் ஏற்படும் போது அதை எவ்வாறு தீர்க்க வேண்டும் என்பதை மன அமைதியுடன் சிந்தித்தல் வேண்டும்.
அதை விடுத்து கோபம் கொண்டிருந்தால், ஏற்படும் பிரச்சனைகளுக்கு முழுமையாக தீர்வு காண இயலாது.
ஒருவன் எப்போதும் கோபத்தை கொண்டிருந்தால், அது அவன் மனநிலையும், உடல் நிலையும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும்.
ஒருவன் கோபம் கொண்டு காணப்படுவதன் காரணமாக அவனுடன் இருக்கும் உறவுகளும் அவனை விட்டுச் செல்லவும் நேரிடும்.
கோபம் ஆனது அவனை மட்டும் பாதிப்படைய செய்வதோடு மட்டுமில்லாமல், அவனை சுற்றியுள்ளவர்களையும் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாக்க செய்யும்.
பிரச்சினைகளை காணும்போது கோபமானது எப்போதும் உருவாகி கொண்டுதான் இருக்கும். ஆனால், ஒருவன் கோபத்தை எப்போதும் தன் கைப்பிடியில் வைத்திருந்தால், அது அவனது அழிவுக்கே வழிவகுக்கும்.
கோபம் ஏற்படும் போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். நிதனாம் ஒன்றால் மட்டும்தான் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
கோபத்தால் ஒரு போதும் தீர்வுகள் பிறப்பதில்லை. பிரச்சினைகள் ஏற்படும் போது கோபம் கொள்ளாமல் நிதானம் கொண்டு தீர்வு காணுங்கள்.
கோபம் தவிர்த்து மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
நன்றி!
– கவிதை குழல்