தானம் செய்வீர் ! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
வணக்கம்!
கவிதை குழல் ஆனது மக்களிடையே ‘‘தானம்’’ பற்றிய எண்ணத்தை மேலொங்க செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் இப்பதிவை பதிவிடுகிறது.
தானம் என்பது ஒரு பொருளை தன்னிடம் இல்லை என்று வேண்டி வருவோர்க்கு அவரது வாழ்வு சிறக்க, இருப்பவரால் பொருளானது வழங்கப்படுவதாகும்.
தானத்தை அளிக்கும் உள்ளமானது கொடை உள்ளமாகத் தான் இருக்கும்.
உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரும் ஒன்றோடொன்று இணைந்திருப்பவையே. அதாவது ஒன்றோடொன்று இணைந்து வாழக்கூடிய வைத்தான்.
அனைவருக்கும் தேவை என்பது எந்த நேரத்திலும் இருந்துகொண்டேதான் இருக்கும். தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக அனைவரும் உழைத்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.
ஆனால், காலத்தின் சூழலோ அல்லது அவரது வாழ்வின் பயனோ என்னவென்றே புரியாமல் ஒருவனுடைய வாழ்வில் வறுமையானது உருவாகி விடுகின்றது
ஒருவன் தன் வறுமையைப் போக்கிக் கொள்வதற்காகவே, இருப்பவர்களிடம் பொருளை கேட்கிறான்.
ஒருவன் திருடி உணவு உண்பதை விட, யாசகம் கேட்டு உணவைப் பெறுவது ஒன்றும் தவறில்லை.
மனித வாழ்வே இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து வாழ தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஒருவன் தானம் அளித்தல் செயலானது, அவனுக்கு நன்மையே விளைவிக்கும்.
ஒருவன் எவ்வித தானத்தை மற்றவர்களுக்கு அளிக்கின்றான் என்பதை இப்போது பார்க்கலாம்.
மனிதர்கள் தானத்தை உணவு, உடை, பணம் என்ற வகையில் ஒருவனுக்கு அளிக்கின்றார்கள்.
ஒருவன் உணவைத் தானமாக வழங்குவதன் மூலம் மற்றொரு மனிதனின் பசியானது அங்கு தீர்க்கப்படுகின்றது.
உலகில் உள்ள மக்களில் இன்றும் பசியுடன் இருக்கும் மக்கள், ஒவ்வொரு பகுதியிலும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
ஒரு பகுதியில் உணவானது மிகுந்து காணப்படுகின்றது. மற்றொரு பகுதியில் உணவுக்கு பஞ்சமானது ஏற்படுகின்றது.
ஒரு பகுதியில் உள்ள மக்கள் உணவு பொருள்களை கழிவு பொருட்களாக உள்ளாக்குகின்றனர். மற்றொரு பகுதியில் உள்ள மக்களுக்கு அந்த உணவு கூட இல்லாத நிலையானது காணப்படுகின்றது.
இந்த நிலைமையை பொருள் இருப்பவர்களிடம் எடுத்துக் கூறினால், நீங்கள் உழைக்க முற்படுவது இல்லை என்று குற்றம் சாட்டுவார்கள்.
நாட்டில் ஒருவன் கூட பசியால் வாடாமல் காக்க வேண்டியது, அரசின் கடமை மட்டுமல்ல தனிமனிதனின் கடமையுமாகும்.
மக்களில் சிலர், ஒருவருக்கு உடை தானத்தையும் அளிப்பார்கள். உடை தானம் ஆனது ஒரு உன்னுடைய மானத்தைக் காக்க உதவுகிறது.
ஒருவன் பசியால் வாடிய போதிலும் கூட, தன் உடல் மானத்தைக் காக்க வேண்டும் என்று எண்ணுவான். உடை தானம் வழங்குவதும் சிறந்ததே.
மக்களில் சிலர், ஒருவருக்கு பணத்தையும் தானமாக வழங்குவார்கள். தானத்தை பெற்ற நபர்கள் அந்த பணத்தை வைத்துக் கொண்டு தங்களின் குடும்பத்தின் வறுமையைப் போக்கிக் கொள்வார்கள். ஒருவனுக்கு பணத்தை தானமாக வழங்குவதும் நன்மையே விளைவிக்கும்.
உணவு, உடை, பணம் போன்ற தானம் வழங்குவதையும் விட, மேலான தானம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால் உடல் உறுப்பு தானமே ஆகும்.
மனிதனாக பிறந்தவர்களில் சிலருக்கு உடல் உறுப்பானது வேலை செய்யாமல் போய் விடுகின்றது. இதனால் எத்தனையோ பேர் தினந்தோறும் துன்பத்தையே அடைகின்றார்கள்.
இதனால் இவர்களின் வாழ்நாள் காலமும் குறைவாகத் தான் காணப்படுகின்றது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இப்பிரச்சனையானது உருவாகின்றது.
ஒரு மனிதனின் குறையைப் போக்க மற்றொரு மனிதன் தானே முன்வர வேண்டும். மண்ணில் சிதையக்கூடிய, உடல் உறுப்புகளை சக மனிதனுக்கு கொடுப்பதனால் இவ்வுலகில் இன்னும் நீங்கள் வாழலாம்.
தானம் செய்வீர்.
நன்றி.