பெற்றோரை கைவிடாதீர்கள்! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
பெற்றோரை கைவிடாதீர்கள்!
முக்கால்களை ஊன்றி நடப்பவர்களை
என்றும் கைவிடாதீர்கள்!
இவர்கள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல்
தமக்கு உழைத்தவரே என்பதை
என்றும் நினைவில் கொள்ளுங்கள்!
– கவிதை குழல்
கவிதை விளக்கம்:
வணக்கம்!
இக்கவிதையானது சமூகத்தில் மனிதன், மனிதனாகத்தான் வாழ்கின்றானா? இல்லையா? என்பதைப் பற்றி விவரிக்கின்றது.
ஒரு குழந்தையைப் பெற்றெடுடுப்பது என்பது பெண்ணுக்கே உரிய பாக்கியமாகும்.
ஒரு குழந்தையை ஈன்றெடுத்து, தாய் தந்தை இருவரும் தனது குழந்தையை என புகழாரம் சூட்டி, வளர வைத்து ஆளாகின்றனர்.
தன் பிள்ளைக்கு தேவையானதை பெற்றோர் அனைத்தும் செய்தும் வருகின்றனர்.
பிள்ளைகளை வளர்ப்பதில் இருந்து அவர்களுக்கு திருமணம் செய்யும் வரை, பெற்றோர் படும் கஷ்டங்களை சொல்ல வார்த்தையே இல்லை.
இவ்வளவு துன்பமானது அவர்களுக்கு ஏற்பட்டாலும், தன் மகன் மகிழ்ச்சியாக இருக்கின்றான் அது போதும் எனக்கு! என நினைத்து ஆனந்தம் கொள்கின்றார்கள்.
இவ்வுலகில் தன் உழைப்பால் வரும் பலன் அனைத்தும், தன் பிள்ளைகளுக்கே சேர வேண்டும் என்று நினைக்கும் உன்னத அன்பு கொண்டவர்களாக பெற்றோர் மட்டுமே இருப்பார்கள்.
அன்பை மட்டும் அள்ளி தருபவர்களாக இல்லை தனது பிள்ளைகளுக்கு அறிவை வழங்கும் குருவாகவும் விளங்குகின்றார்கள்.
பெற்றோர், தன் பிள்ளை அறிவைக் கொண்டு எப்படியாவது சாதித்து விடுவான் என்று ஊக்கம் அடைகின்றார்கள்.
பிள்ளைகள் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள் என்ற ஒரு மன நிறைவே, அவர்களுக்கு எத்தனை துன்பம் வந்தாலும், அதை தாங்கி கொள்ள சக்தியை அளிக்கின்றது.
பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தன் கஷ்டத்தை சொல்லியே வளர்ப்பதில்லை.
துன்பத்தை சந்திக்க தெரிந்தவனுக்கு மட்டுமே, துன்பத்தின் மூலம் கற்றுக் கொள்ளப்படும் பாடமானது, மற்றொரு சூழலையும் சமாளிக்க உதவுகிறது.
இன்ப துன்பங்களை எவன் ஒருவன் ஒரே மாதிரியாக கையாளத் தொடங்குகின்றனோ, அவன் எத்தகைய இடையூறுகளைக் கண்டும் மனம் வருந்தவில்லை.
இதுவும் கடந்து போகும் என நினைத்து அடுத்த இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டே இருப்பான்.
பெற்றோர்களும் இது போன்ற நிலைமைதான் தன் மனதில் உருவாக்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு குழந்தைக்குப் பெற்றோர் எவ்வளவு நன்மை செய்திருக்கிறார்கள் என்று சொல்ல வார்த்தையே இல்லை.
இதை ஏன் கூற வேண்டும் என்றால் பிள்ளைகள் எனக்காக என் பெற்றோர் என்ன செய்திருக்கிறார்? என்று கேள்வியானது கேட்கப்படுவதாலேயே!
பெற்றோர்கள் செய்த உதவியை சொல்லிக் காண்பிக்கின்றார்களே? என்ற கேள்வியை பிள்ளைகள் கேட்பார்கள்.
செய்த உதவியை சொல்லி காண்பிக்கின்ற அளவுக்கு, அவர்களை துன்ப மன நிலைக்கு தள்ளியது யார் என்பதை நீங்களே நினைவு கூறுங்கள்.
குற்றம் செய்தவனை விட குற்றத்தை செய்ய தூண்டுபவர் யார் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.
சில பிள்ளைகள் தனது பெற்றோர் வயது முதிர்ப்பு ஆகும் தருவாயில் அவர்களைக் கண்டு கொள்வதே இல்லை.
தனது பெற்றோரைக் தனியே விட்டுவிட்டு தனது சுகபோக வாழ்வை நோக்கிச் செல்கின்றார்கள்.
இதுவரை தம் வாழ்வில் பெற்றோர்கள் செய்த பலனை நினைத்தாவது, பிள்ளைகள் தன் பெற்றோரை வயது முதிர்வடையும் தருவாயில் உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
சமூகத்தில் எத்தனையோ முதியவர்கள் தங்கள் இல்லறத்தை விடுத்து தங்க இடமில்லாமல் யாரும் ஆதரிக்க இயலாத நபர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பெற்றோரை தவிக்க விட்ட, ஒவ்வொரு பிள்ளையும் தான் ஒரு மனிதனா? என்ற கேள்வியை கேட்டுக் கொள்வது தான் சரியாக இருக்கும்.
பெற்றோரை கைவிடாதீர்கள்!
நன்றி
– கவிதை குழல்