குரல் கொடு! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
குரல் கொடுக்க தயாராக இரு.
குரல் கொடுக்கவில்லை எனில்,
நாளை எண்ணும் நேரத்தில்
எல்லாம் அழிந்து இருக்கும்.
– கவிதை குழல்
கவிதை விளக்கம்:
வணக்கம்!
வாழக்கையில் ஒவ்வொரு மனிதனும், பயணிக்கும் ஒரு முக்கிய அங்கம் சமுதாயம் ஆகும்.
சமுதாயத்தில் தினந்தோறும் பல பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கும்.
இவ்வாறு ஏற்படும் தருவாயில் அதற்காக குரல் எழுப்ப வேண்டும் தானே!
அதாவது அப்பிரச்சனைக்கு தீர்வை காண முயற்சி செய்பவருக்கு ஆதரவை அளித்தல் வேண்டும்.
அதோடு மட்டுமில்லாமல் பிரச்சனையானது தனிமனிதனுக்கும் ஏற்படும்.
ஒருவன் தன்னை வாழ்க்கை நிலைமையை இல்லாமல் ஆக்க முயற்ச்சிக்கும் போது, அவனுக்கு அதற்கான தக்க பதிலடியும் வழங்குதல் வேண்டும்.
அவன் அப்படித்தான் செய்வான் என்று விலகி இருந்தால், வாழ்வின் சூழலானது முற்றிலும் தலைகீழாக மாறி விடும்.
காலத்தின் தன்மைக்கேற்ப தனக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வை காணும் விதத்தினை கைதேர்ந்து கற்றுக்கொள்ளல் வேண்டும்.
பிரச்சனைகளுக்கு கண்டு என்றும் விலகி செல்லாதே. எதிர்த்து போராட அறிவைக் அடைந்துக் கொள்.
நன்றி!
– கவிதை குழல்.