சமூக ஊடகங்கள் பற்றிய பார்வை! – Kavithai Kuzhal
சமூக ஊடகங்கள்:
சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த
சமூக ஊடகத்தை பயன்படுத்தினாலும்,
பயன்படுத்தும் வீதத்தினை தன்
கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் அவசியமாகும்.
– கவிதை குழல்
கவிதை விளக்கம்:
சமூக ஊடகங்கள்: வரமா… சாபமா?
வணக்கம்!
இன்றைய காலத்தில் எந்த ஒரு நபராக இருந்தாலும், சமூக ஊடகத்தில் இல்லாமல் இருக்கமாட்டார்.
சமூக ஊடகங்கள் பல பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை, ஒருவன் இருக்கும் இடத்திலே கொண்டு வந்து சேர்க்கும் அரும்பெரும் காரியத்தை செய்து கொண்டு வருகிறது.
இதனால், ஒருவன் பல பகுதிகளில் உள்ள கலாச்சார நிகழ்வுகள், பண்பாடுகள், வாழும் வாழ்க்கை முறை, தொழில்முறை, கல்வி கற்பிக்கப்படும் முறை என அனைத்தையையும் ஒரே பகுதியில் இருந்து காணமுடிகின்றது.
உலகில் தினம்தோறும் ஏற்படும் மாறுபாடுகளும், கால சூழ்நிலைகளும் சமூக ஊடகங்கள் மூலமாக ஒருவன் இருக்கும் இடத்திலே அறிந்து கொள்ளவும் முடிகின்றது.
பெரும்பாலும் மக்கள் அனைவரும் தங்களது திறமையை வெளிப்படுத்த சமூக ஊடகங்கள் அடித்தளமாக காணப்படுகின்றது.
ஒருவனுக்கு தனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு யாரும் கொடுக்கவில்லை என்றாலும், தன் கையிலிருக்கும் தொலைபேசியின் உதவியால் தனது திறமையை படம் பிடித்து, சமூக ஊடகத்தில் பதிவிடுவதன் மூலமாக உலகிற்கு அறிய செய்ய முடிகிறது.
சமூக ஊடகத்தின் மூலமாக அவனது திறமைக்கான அங்கீகாரமும் கிடைக்கின்றது.
சமூக ஊடகங்கள் மூலம் ஒரு நபர் பிரபலம் அடைந்து அதன் மூலம் தனக்கான வருவாயை ஈட்டிக் கொள்ள முடிகின்றது.
எந்த ஒரு கருத்தையும் சமூகத்தில் பதிவு செய்தாலும் அதற்கான விமர்சனங்கள் வந்து கொண்டேதான் இருக்கும்.
ஒருவன் எந்த செயலை செய்கின்றானோ அதனைப் பொறுத்து அவனுக்கு சமூக ஊடகத்தில் மதிப்பானது வந்தடைகின்றது.
ஒருவன் தவறான காரியத்தை தொடர்ந்து பரப்பிக் கொண்டு வந்தால் அதற்கான தக்க தண்டனையும் வழங்கப்படுகின்றது.
சமூக ஊடகங்கத்தை நல்வழியில் கையாளுகின்ற வரையில் அது யாருக்கும் தீமை விளைவிக்காது.
பலர் திறமையை வெளிப்படுத்த சமூக ஊடகங்கள் பயன்பட்டாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகத்தான் காணப்படுகின்றன.
என்ன பாதிப்புகள் உண்டாகின்றன? என கேட்டால் ஒரு நபரின் வாழ்க்கையே இல்லாமல் போகக்கூடும் அளவுக்கு முகம் தெரியாத நபரால் சூழ்நிலையானது ஒருவனுக்கு உருவாக்கப்படுகின்றது.
அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் ஆனது வழங்கப்பட்டாலும் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
உலகில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுமே பல மாற்றங்களை ஏற்படுத்த வல்லன.
ஒருவன் செய்யும் தவறானது ஒருவரின் வாழ்க்கையை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும் என்றால் ஒவ்வொருவரும் சமூக ஊடகத்தை எவ்வளவு கவனுத்துடன் கையாள வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
ஒருவர் மீது தவறான கருத்து சமூக ஊடகத்தில் பரப்ப படுவதன் மூலம் அவர் தவறான பிம்பத்தை, சமூக ஊடகத்தின் வழியே அனைவரிடத்திலும் உருவாக்கி விடுகின்றது.
இதனால் அவரது வாழ்க்கை சூழலே கேள்விக்குறியாக மாறி விடுகின்றது.
அவர் பொது வெளியில் சென்றால் கூட இவர் தவறு செய்திருக்கிறார் என்று துன்புறுத்துவும் செய்கிறார்கள்.
ஒரு செய்தியை எவர் கூற கேட்டாலும் அதன் உண்மைப் பொருளை அறிந்து கொள்ள உதவுவது அறிவு ஆகும்.
அந்த அறிவைப் பயன்படுத்தி உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை எது உண்மை? எது தவறு? என்று புரிந்து கொள்ளுங்கள்.
சமூக ஊடகத்தை ஆக்கத்திற்காக பயன்படுத்துங்கள், அழிவிற்காக பயன்படுத்தாதீர்கள்.
நன்றி!
– கவிதை குழல்