சுயநலம் ஏன்?
இவ்வுலகில்
சுயநலமாக இருந்தால் நல்லவன்,
பொதுநலமாக இருந்தால் கெட்டவன்
என்ற பட்டம் தான் கிடைக்கும்.
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
பிறக்கும் மனிதரெல்லாம் சுயநலம் கொண்டு வாழ தொடங்கினால், இவ்வுலக வாழ்வானது எவருக்கும் இன்பத்தை தராது.
ஒருவொருக்கொருவர் உதவி செய்தால் மட்டும் தான் அனைவரது வாழ்வும் நலமாகும்.
சிலர் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்று, தனது வாழ்க்கையை மக்களுக்காக அர்பணிக்கின்றார்கள்.
அத்தகைய மனிதர்களை, அதாவது அவர் நல்லது செய்வதை பிடிக்காத நபர்கள், அவரை அவன் சுயநலத்திற்காக இச்செயலை புரிகின்றான் என அவதூறு பரப்புகின்றனர்.
ஒருவன் பொதுநலத்திற்காக பாடு பட வேண்டும் என்று முன்னேறி சென்றாலும், சக மனிதர்களின் இழிவான செயல்களால் சுயநலம் கொண்டவன் என்ற பட்டம் தான் அவனுக்கு கிடைக்கின்றது.
வாழ்வதோ சில காலம் தான். நல்லதை நினைத்து நல்வாழ்வு வாழுங்கள்!
நன்றி.
– கவிதை குழல்.