சூது – சூதாட்டம் தவிர்! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
சூது – சூதாட்டம் தவிர்! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
வணக்கம் !
சூதாட்டம் ஆனது நம்முடைய வாழ்வில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த சூது என்ற பிரிவின் வாயிலாக நாம் பார்க்கலாம்.
சூது என்பது ஒரு விளையாட்டு ஆகும் என்று கூறுவோரும் உண்டு.
சூதாட்டம் என்பது ஒரு விளையாட்டாடு என்று கருதி அதில் ஈடுபடுட்டு அனைத்தையும் இழந்து வாழ்வை இழந்தவர்களும் உண்டு.
ஆனால் அந்த சூது விளையாட்டில் எத்தனை குடும்பங்கள் தங்களுடைய அழிவைச் சந்திதன என்பதைக் கண்டால் மனமானது மிகவும் வேதனை அளிக்கும்.
சூது விளையாட்டானது, சமுகத்திற்கு மிகப்பெரிய தீங்கினைச் விளைவிக்க கூடியதாகும்.
உலகில் வாழும் அனைவரும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை கொள்வது சரிதான்.
பணத்தை சீக்கிரமாக சம்பாதிக்க தவறான வழிகளில் ஈடுபடுவது சரியல்ல.
அதாவது சூது விளையாட்டில் ஈடுபடுவது சரியல்ல.
இந்த சூது விளையாட்டில் மூலமாக பொருள் கிடைத்தாலும் வெற்றி அடைந்தாலும் இன்பம் தருவதாக தான் இருக்கும் .
ஆனால் போகப் போகத்தான் தன்னுடைய குடும்பத்தின் நிலைமையும் மாறும்.
அதாவது மிகப்பெரிய துன்பத்திற்கு வழிவகுக்கும்.
சரி நான் தான் பணத்தை சம்பாதிக்கின்றேன? எவ்வாறு நான் துன்பத்தை அடைவேன் என்று கேட்டால் அதற்கும் பதில் உண்டு.
ஒரு செயலின் மீது கொண்ட மோகம் ஆனது முதலில் இன்பத்தையே ஏற்படுத்தும்.
அதுபோலத்தான் சூது விளையாட்டும் முதலில் பொருள் பெறுவதனால் இன்பத்தை அடைவோம்.
பிறகு பொருள் இழப்பதால் துன்பத்தை அடைவோம்.
முதலில் குறைந்த பணம் வைத்து நிறைய பொருள் ஈட்டினாலும் ,
பிறகு குறைந்த பணம் போகப்போக, இருக்கின்ற அனைத்து பணமும் இல்லாமல் போய்விடும்.
எனவே முதலில் இன்பம் தருவதாக இருந்தாலும் சூதாட்டத்தை விளையாடக்கூடாது.
உதாரணமாக மகாபாரதத்தை எடுத்துக்கொள்வோம்.
இதில் சூது விளையாட்டால் ஒரு மனிதனானவன் தன்னுடைய குடும்பத்தில் எவ்வளவு பெரிய பிரச்சினையை சந்தித்தான் என்பதை நீங்கள் கண்கூடாக கண்டதே.
சூது விளையாட்டால் நம் முன்னோர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை கண்டும் நாம் அதே தவறைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.
சூதானது அழிவை மட்டுமே ஏற்படுத்தவல்லது ஆகும்.
எனவே சூதாட்டத்தை தீய செயல் எனக் கருதி செய்யாமல் இருத்தல் வேண்டும்.
இவற்றை எல்லாம் அறிந்தும் நான் சூது விளையாட செல்வேன் என்றால் அழிவது நிச்சயம்.
கவிதை குழல் வாயிலாக, சூதாட்டத்தில் நாம் ஏன் ஈடுபடக்கூடாது? மற்றும் அதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? என்பதை எளிமையாகவும் உள்ளார்ந்த பொருளுடன் பார்க்கலாம்.
சூது – சூதாட்டம் தவிர்!
1. குடியை காக்க
சூதாட சென்றால்,
இருக்கும் நிலைமையையும்
அழிந்து, குடியானது மடியும்.
2.சூது விளையாட்டானது
முதலில் இன்பம் தந்தாலும்
பிறகு துன்பத்தையே தரும்.
3.சூது விளையாட்டானது
அறவழியில் இருந்து விலக்கி,
தீய வழியில் செல்ல வழிவகுக்கும்.
4. சூதாட்டம் ஆனது மனதில் நற்குணத்தையும்,
சுய ஒழுக்கத்தையும் அழிக்கும்.
5.சூது விளையாட்டானது சமுதாயத்தில் மதிப்பையும்
மரியாதையும் இழக்கச் செய்யும்.
6.சூது விளையாட்டானது தன்னை அழிப்பதோடு மட்டுமல்லாமல்
தன் குடும்பத்தையும் அழிக்கும்.
7.சூது விளையாடி வாழ்வை இழந்தவர்களை கண்டாவது,
சூது விளையாட செல்லாமல் இருக்க வேண்டும்.
8. அறம் எதுவென தெரிந்தும்,
சூது விளையாட சென்றால்
அழிவது நிச்சயம்.