செயல் – தெரிந்து செய்! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
வணக்கம்!
கவிதை குழலின் மூலமாக இன்று “செயல்” என்ற தலைப்பை எடுத்துக் கொண்டு அதிலிருந்து செயலைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவற்றை இப்பதிவில் காணலாம்.
முதலில் செயல் என்றால் என்ன? என்பதை அறியலாம்.
செயல் என்பது ஏதாவது ஒரு வேலையை, அதாதவது நாம் ஒரு தொழிலை மோற்கோள்வதாகும்.
நாம் வேலை செய்வது எதற்காகவென்றால் அதன் மூலம் பணத்தை சம்பாதித்து தன் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காகவே ஆகும்.
இதுவே செயலை பற்றிய அடிப்படை அறிவாகும்.
ஒரு தொழிலை மேற்க்கொள்ளும் போது, தொழிலை செய்வதற்கு அறிய வேண்டியவற்றை அறிந்து கொள்வது மிக முக்கியமாகும்.
முதலில் தொழில் செய்வதற்கு முன்பாக அந்த தொழிலைப் பற்றிய அறிவை பெற்றிருத்தல் முக்கியமாகும்.
ஒரு செயலை மேற்கோள்வதற்கு முன்பாக, செயலால் முதலில் அழியக் கூடியதும், பின்னர் ஆகி வர கூடியதும், அச்செயலால் கிடைக்கும் மிச்சமும் அறிந்து அதன் பின்னரே செய்ய வேண்டும்.
இதற்கான விளக்கத்தை ஒரு உதாரணத்தின் வாயிலாக கூறுவதன் மூலம் இன்னும் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
ஒரு ஊரிலுள்ள பொற்கொல்லன், அந்த ஊரில் உள்ள மக்களுக்கு அவர்கள் விரும்பத்திற்கு ஏற்ப, தங்க ஆபரணங்களை செய்து கொடுத்து வருகின்றான்.
தங்க ஆபரணங்களை செய்ய வேண்டுமெனில், தங்கமானது தேவைப்படுகிறது.
தங்கம் முதலில் கிடைக்க கூடியது எவ்வாறு என்றால், கட்டியாக தான் கிடைக்கும்.
ஆபரணம் பெற வேண்டுமெனில், தங்க கட்டியானது நெருப்பில் உருக்கி, அதற்கு ஏற்ற வடிவமைப்பு உடைய அச்சில், தங்க கூழ்மத்தை ஊற்ற வேண்டும்.
அதன் பிறகு தங்கம் ஆனது ஆபரணமாக உருவெடுக்கிறது.
இச்செயலால் முதலில் அழியக் கூடியது தங்கம் ஆகும். பின்னர் ஆகி வரக்கூடியது தங்கமானது ஆபரணமாக தயாரிக்கப்படுவதாகும்.
அடுத்து இச்செயல் புரிவதால், பொற்கொல்லன் உழைப்புக்கு கிடைத்த மிச்சமானது, அதனால் அவன் ஈட்டிய பணமாகும்.
மிச்சம் என்பது எவ்வாறு என்றால், தங்க கட்டியை அவன் வாங்கி, அதனை உருக்கி ஆபரணமாக உருவாக்கி, அதனை விற்பதால் கிடைப்பதே ஆகும்.
இந்த உதராணத்தின் மூலமாக செயல் மேற்கொள்வதற்கு முன்பாக என்ன தேவை என்பதை உணர்ந்து இருப்பீர்கள்.
அடுத்து செயலை செய்ய துவங்கும் வேளையில், அத்தொழில் தெரிந்த நபர்களுடன் இணைந்து செய்தல் வேண்டும். அப்போது தான் மேற்கொண்ட செயலில் வெற்றியை அடைய முடியும்.
தொழிலை செய்ததற்கு முன்பாக எப்போதும் அதை பற்றிய முழுமையான அறிவை பெற்றிருத்தல் வேண்டும்.
தொழிலை தொடங்குவதற்கு முன்பாக அதனை செய்வதற்கு தகுந்த காலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அப்போது தான் மேற்கொண்ட தொழிலின் மூலம் பலனை அடைய முடியும்.
எனவே சரியான காலத்திற்காக எப்போதும் விழிப்புடன் காத்து இருத்தல் வேண்டும்.
அடுத்து, தொழிலை செயல்படுத்துவதற்கு தகுந்த இடத்தை தேர்ந்தெடுத்தலும் முக்கியமாகும்.
தொழிலை தேவையான இடத்தில் செய்யாமல், தேவையற்ற இடத்தில் செய்தால் அதனால் எப்பயனும் இல்லை.
எனவே, தொழிலுக்கு தகுந்தவாறு சரியான இடத்தை தேர்ந்தேடுத்தல் இன்றியமையாததாகும்.
தொழிலை செய்யும் போது தொழில் தெரிந்த நபர்களுடன் சேர்ந்து செய்தால் வெற்றியை அடைவது சுலபமாகும்.
இதன் மூலம் செயலை மேற்கொள்ளுவதற்கு முன்பாக தேவையானவற்றை அறிந்து இருப்போம்.
இனி கவிதைகள் வாயிலாக தொழிலை தெரிந்து செய்வதற்காக அறிவுரையை காணலாம்.
1.எச்செயலை புரிவதாக இருந்தாலும், அச்செயலுக்கான அறிவை பெற்றிருத்தல் வேண்டும். அப்போது தான் செயலை தொடர்ந்து செய்ய முடியும்.
-கவிதை குழல்.