”சொத்து” கற்று தருவது?
சொத்து என்ற பிரிவினிலே
சொந்தங்களை இழக்கும்
பிறவிகளாக வாழக்கூடாது.
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
வணக்கம்!
வாழும் வாழ்க்கையானது என்றும் நிரந்தரம் இல்லை என்று யாவரும் அறிந்திருப்பதே.
இன்று இருப்பவன், நாளை இருக்கும் இடம் இல்லாமல் கூட போகலாம்.
இவ்வாறு இருக்கும் தருவாயில், சமுதாயத்தில் நிலம் காரணமாக ஏற்படும் பிரச்சனைகள் தீர்க்க இயலா பிரச்சனையாக உருவாகியுள்ளது.
ஒரு குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகள் எவ்வளவு தான் ஒற்றுமையாக இருந்தாலும், சொத்து என்ற நில ஆசையின் காரணமாக, குடும்பத்தில் விரிசல் உண்டாகி விடுகின்றது.
உறவுகளுக்கிடையே, அவரவர் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காக பாகங்கள் பிரித்தாலும், உறவுகளுக்கிடையான மனிதர்களிடத்தில் பிரச்சனைகள் தான் உருவாகின்றன.
உறவுகள் இல்லாத நிலை உருவாகினால், வாழும் வாழ்க்கையே அர்த்தமற்றதாகி தான் காணப்படும்.
உறவுகளுக்கிடையே விட்டுக்கொடுத்து, உறவுகளுடன் இணைந்து வாழுங்கள்.
நன்றி!
– கவிதை குழல்.