தனி மரம் தோப்பாகாது!
தனி மரம் தோப்பாகாது என்று கூறுவார்கள்.
ஆனால், தோப்பானாது தனி மரத்திலிருந்து
விளையும் விதைகளில் இருந்து தான் உருவாகிறது.
அதுபோல தான், நீ தனி ஒருவனாய்
இருக்கின்றாய் என்று கலங்காதே!
தனி ஒருவனால் தான்
எதையும் சாதிக்க முடியும்.
நீ எண்ணியதை துணிந்து செய்!
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தில், ஒரு விதை வளர்வதை போலவே, அவனும் வளர்கின்றான்.
தனி ஒருவனாக எத்தனையோ நபர்கள், சாதிக்க வேண்டும் என்று முயற்சித்து கொண்டு இருக்கிறார்கள்.
முயற்சியை மட்டும் கைவிடாது மேற்கொண்டால் போதும்.
உனக்கான வெற்றியை அதுவே வழங்கும்.
– கவிதை குழல்.