கனவு காணுங்கள் ! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
கனவு காணுங்கள் ! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
வணக்கம்!
கவிதை குழல் மூலமாக இன்று ”கனவு” பற்றிய எண்ணங்களைப் இங்கு காண்போம்.
கனவு என்பது ஒவ்வொரு மனிதனும் காணக்கூடியதாக இருக்கும்.
கனவு ஆனது ஒவ்வொருவரும் தன் நிலையை மாற்றி அமைத்து கொள்வதற்காக காண பட கூடியதே. வாழ்க்கையில் தான் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கனவுகளை காண வேண்டியது இன்றியமையாததாகும்.
ஒவ்வொரு தனி மனிதன் மற்றும் குடும்பத்தின் முன்னேற்றமே ஒரு நாட்டின் வளர்ச்சிகக்கான அடி கல்லாகும். எனவே ஒவ்வொரு மனிதனும் தன் திறமையை வெளிக் கொணர கனவுகள் காணுதல் வேண்டும்.
வாழ்வில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கனவுகளை கண்டால் மட்டும் போதாது, கண்ட கனவை செயல் படுத்தும் முயற்சியை எடுக்க வேண்டும்.
கனவுகளை அடைவதற்கு வயது என்றும் ஒரு தடையில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எவ்வளவு பெரிய துன்பம் நேர்ந்தாலும், இலக்கை அடைய முயற்சியை மேற்க்கொண்டு வெற்றியை அடைவேன் என்று எண்ணத்தை நம் மனதில் விதைத்து கொள்ள வேண்டும்.
நம் மனதில் என்ன விதைக்கின்றோமோ அதுவே செயலாக மாற அடித்தளமாக உள்ளது. நல்ல சிந்தனைகளையும், நல்ல வழியையும் செயலை தொடங்கும் போது கடைபிடிக்க வேண்டும்.
உலகில் உள்ள அனைவரும் தான் சாதிக்க வேண்டும் என்று ஏதாவது ஒரு முயற்சியில் ஈடுபடுவார்கள்.
உண்மையில் முயற்சியில் ஈடுபடுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
ஒருவன் தான் இச்செயலை புரிந்து வெற்றி பெற வேண்டும் எனக் கருதி செயலை தொடங்கினால் அதில் ஏற்படும் இன்னல்கள் தான் ஏராளம்.
முயற்சி உடையவனுக்கு இன்னல்கள் ஏற்படுவது இயல்பு தான் என்று எல்லோரும் நினைப்போம்.
ஆனால் ஏற்படும் பிரச்சனையானது எவ்வாறு இருக்கும் என்றால், தான் மேற்கொண்ட முயற்சியை விட்டு விடக்கூடிய அளவுக்கு அவனது சூழ்நிலையை மாற்றி விடக் கூடியதாக இருக்கும்.
இந்த சூழ்நிலையில் இருந்து யார் மீண்டு வருகிறார்களோ அவர்களே தனது முயற்சியில் வெற்றி பெறுகிறார்கள்.
ஒவ்வொருவரும் தமக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை கண்டு மனம் தளராமல் இருக்க வேண்டும்.
பிரச்சனை என்பது அந்த நேரத்திற்கானதே தவிர அது தன் வாழ்நாள் முழுவதும் தொடரக் கூடியது அல்ல.
பிரச்சனையை எவ்விதத்தில் கையாளுகின்றமோ அதனைப் பொறுத்தே அப்பிரச்சினையின் தாக்கத்தை நமது பிடியில் வைத்திருக்க முடியும்.
எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் சரி, பிரச்சனையை தன் கைக்குள் வைத்து இருந்தால் மட்டுமே அதை சமாளிக்க முடியும்.
அது எல்லை மீறி விட்டால் பிரச்சனையை சமாளிப்பது கடினமாகி விடும்.
பிரச்சினையை கண்டு மனம் தளராமல் அதனை எவ்வாறு தீர்ப்பது என்பது துரித கனத்தில் முடிவெடுக்க வேண்டும்.
எவ்வளவு சீக்கிரமாக பிரச்சினைக்கு தீர்வு காணுகின்றோமோ, அதனை பொறுத்தே முயற்சியில் அடுத்த கட்டத்திற்கும் செல்ல முடியும்.
ஒரு இடத்தை அடைய எவ்வாறு தனது காலடியை ஒவ்வொன்றாக வைத்து நடந்து செல்கின்றோமோ, அதுபோலத்தான் மேற்கொண்ட முயற்சியில் இலக்கை அடைய படிப்படியாக தான் செல்ல முடியும்.
இவற்றையெல்லாம் நிகழ்த்த வேண்டுமெனில், முதலில் கனவு காண வேண்டும்.
கனவு என்பது தனி மனித முன்னேற்றத்தை ஊக்குவிப்பதாகவும், சமுதாயத்தை மேம்படுத்துவதாகவும் இருத்தல் வேண்டும்.
கனவு காணுங்கள் ! சாதனை புரியுங்கள்!
நன்றி
-கவிதை குழல்.