தமிழர் வரலாறு | Kavithai Kuzhal

தமிழர் வரலாறு | Kavithai Kuzhal

வணக்கம்!

பழமையையும் வளமையையும் கொண்டு, தமிழினம் உலகெங்கும் பரவி காணப்படுவதை அனைவரும் அறிவார்கள்.

இருந்தாலும் தமிழினத்தின் வரலாற்றை முழுவமாக அறிய, முழுமையான சான்றுகள் எங்கும் கிடைத்ததில்லை.

தமிழ் வரலாறு ஆனது இன்றையளவில், அறிந்து கொள்ளப்படுவது எவ்வாறென்றால், வரலாற்று நூல்களின் குறிப்புகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், நாணயங்கள், அகழ்வாராய்ச்சிகள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஆய்வை மேற்கொண்டு, தமிழரது கால அளவை வரை கணக்கிட்டு உள்ளனர்.

தமிழரின் வரலாறை அறிய வேண்டும் என்று தமிழ் மற்றும் உலக மக்களிடமும் ஆர்வமானது இன்று மிகுந்துள்ளது.

நாம் சங்க இலக்கியங்களை படித்திருந்தால், ஒன்று மட்டும் புரிந்து இருக்கும். அது என்னவென்றால், தமிழர்கள் வாழ்வியல் முறையை அறிந்திருக்கிலாம்‌.

அதில், மக்கள் வாழ்ந்த வாழ்வு முறை, அவர்களது பழக்க வழக்கங்கள், அறநெறியில் வாழ்ந்த தன்மை, வாணிகம் செய்த முறை, நாட்டை ஆட்சி செய்த முறை, போர் வீரர்களின் பலம், கல்வி,அறிவு, சிந்தனை என பலவற்றில் தமிழர்கள் சிறந்து விளங்கினர் என்பதை சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றனர்.

தமிழர்கள், தென்னிந்திய நிலப்பரப்பிற்கு உரியவர் ஆவார்.  தமிழர்கள் தங்களது வாழ்க்கை முறையை இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ தொடங்கினார்.

தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நிலப்பகுதியை ஐந்து கூறுகளாகப் பிரித்து வைத்திருந்தனர். அந்த நிலப்பரப்பிற்கு திணை என்று பெயரிட்டனர்.

நாம் ஐந்திணைகளை கண்டிப்பாக அறிந்திருப்போம். அது என்னவென்றால் மலையும் மலை சார்ந்த பகுதியானது குறிஞ்சி என்றும், காடும் காடு சார்ந்த நிலமும் முல்லை என்றும், மலைக்கும் காடுக்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள வறண்ட நிலமானது பாலை என்றும், வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் எனவும் ,கடலும் கடல் சார்ந்த இடமானது நெய்தல் என ஐந்து கூறுகளாகப் பிரித்து வைத்திருந்தனர்.

தமிழர்கள் நிலத்தை பிரித்ததோடு மட்டுமில்லாமல், அந்த இடத்தில் வாழ்வதற்கான வாழ்க்கை முறையையும், தொழிலையும் வகுத்தனர்.

இதன் மூலம் தான் தமிழர்களின் வாணிகமானது நாடெங்கும் பரந்து விரிந்தது. இதனால் தான் தமிழர்களின் வாழ்க்கை மகழ்ச்சியானது என்றும் நிலைத்தது.

ஒரு இனத்தின் வளர்ச்சி என்பது, அவர்கள் வாழ்ந்த வாழ்வியல் முறையையும், வாழ வழி வகுத்த தன்மையையும் சார்ந்திருக்கும்.

தமிழன் மட்டுமே, வாழ்வியல் வழி முறைகளை உலகிற்கு எடுத்துரைத்துள்ளான். அது எவ்வாறு என்றால், தமிழர்கள் வாணிகம் செய்ய மற்ற நாடுகளுக்கு சென்றார்கள் அல்லவா அப்போது தான்.

வாணிகம் செய்ய மற்ற நாடுகளுக்கு செல்லும் போது, மக்கள் தாங்கள் அப்பகுதியிலே தங்கி வாணிகத்தை சிறப்பாக செய்தும், தான் கற்ற வித்தையை அனைவருக்கும் கற்று கொடுக்கவும் ஆரம்பித்திருந்தார்.

ஒரு இனம் ஆனது வாணிகம் செய்ய தொடங்கியிருந்தால், அதற்கு முன் அப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கை முறையானது எப்படி இருந்திருக்கும் என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

தமிழர்கள், தங்களுக்குள் இருந்த திறனை வெளிக்கொணர்ந்த நபர்களாக விளங்கியிருக்கிறார்கள்.

ஒருவன் தன் சமுகத்திற்கு மட்டும், வாழ வழி வகுக்காமால், உலகிற்கே வாழ வழி வகுத்து இருந்தால் அவனது தொலை நோக்கு பார்வையானது எவ்வளவு விரிந்திருக்கிறது என்று பார்த்தால் வியக்க வைக்கிறது.

இதுவரை நாம் தமிழன் வாழ பிரித்த ஐந்து நிலப்பரப்பை பற்றிய அறிவையும், தமிழனது அறிவை கண்டு வியந்தோம்.

இனி, அடுத்த பகுதியில் ஐந்திணைக்குரிய மக்களின் வாழ்வியல் முறைகளை பார்க்கலாம்.

நன்றி…

-கவிதை குழல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *