முயற்சி கவிதை | Motivational Quotes – Kavithai Kuzhal

முயற்சி கவிதை:

நான் ஏன் பிறந்தேன்?

என்று கவலை கொள்ளாதீர்கள்.

நான் பிறந்ததே சாதிக்க தான்

என எண்ணி முயற்சியை தொடருங்கள்.

– கவிதை குழல்

கவிதை விளக்கம்:

வணக்கம்!

இக்கவிதையானது ஒருவன் தனக்கு மட்டும் தான் இப்படிப்பட்ட துன்பங்கள் வாழ்க்கையில் உருவாகிறது என எண்ணி வருந்துவோர்க்கு ஊக்கத்தை ஊட்டுவதற்காக படைக்கப்பட்டது.

மனிதனாக பிறக்க வேண்டும் எனில் ஒவ்வொருவரும் ஏதாவது புண்ணியம் தான் செய்திருக்க வேண்டும்.

பிறவிகளில் மகத்துவம் வாய்ந்த பிறவியான மனித பிறவியைப் பெற்றால் போற்றி மகிழ வேண்டும்.

மனிதனானவன் பல துன்பங்களை அனுபவித்து, வாழ்க்கையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே பல சோதனைகள் உருவாகின்றன.

மனிதாக பிறந்து பல துன்பங்களை அனுபவிப்பது தான், பிறவிக் கடலை கடக்க முடியும்.

எந்த ஒரு நபராக ஆயினும் தனது வாழ்க்கையில் இன்னல்களை சந்தித்து தான் ஆக வேண்டும். இதுவே இயற்கையின் நியதியுமாகும்.

ஒரு மனிதனுக்கு ஏற்படும் ஒவ்வொரு துன்பமும் அவனுக்கு ஒரு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுக்கும். அந்த வாழ்க்கை படமானது அனைவருக்கும் பயன்படும்.

ஒரு சூழலில் கற்று, தெரிந்த பாடமே பல சூழல்களை சமாளிக்க உதவுகிறது.

ஒருவனது வாழ்வில் ஏற்படும் அனைத்து இன்னல்களும் அவனுக்கு ஒரு வாழ்க்கை புரிதலை ஏற்படுத்தும். வாழ்க்கை புரிதல் தானே ஒருவனுடைய வாழ்வில் வாழ்க்கையின் யதார்த்தத்தை கற்றுத் தரும்.

தினம்தொரும் தான் பிரச்சனைகள் எழுந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு பிரச்சனையைக் கண்டு மனம் வருந்தாமல் அப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் என்ற அறிவைத் தேடிச் செல்ல வேண்டும்.

அப்போது தான் அப்பிரச்சினையை நம் வாழ்வில் இருந்து முழுமையாக விளக்க முடியும்.

ஒருவனுக்கு ஏற்படும் கால சூழ்நிலைகளும் அவனுக்கு துன்பத்தை உருவாக்குகின்றன. 

ஒருவன் சூழ்நிலையை எவ்வாறு கையாளக் கற்றுக் கொள்கின்றான் என்பதை பொறுத்தே அவனது மனதில் மனத்தின்மையானது உருவாகின்றது.

ஒருவன் பிரச்சனை ஏற்படும் போது சூழ்நிலையை சரியாக கையாண்டால் மட்டும் தான் அது அவனுக்கு நன்மையை விளைவிக்கும். இல்லையென்றால் பிரச்சனையானது மேலும் மேலும் தான் அதிகரிக்கும்.

பெரும்பாலும் ஒருவன் வருந்துவது எதற்காக என்றால் தனக்கு ஏற்பட்ட பிரச்சினையானது தன் கையை விட்டுப் போகும்போது தான். அதாவது, பிரச்சினையானது சமாளிக்க முடியாத சூழலாக உருவெடுப்பது ஆகும்.

துன்பத்தைக் கண்டு வருந்தி கொண்டு இருந்தால் ஏற்பட்ட பிரச்சனையானது தீர போவதில்லை.

பிரச்சினை கண்டு விலகாமல் எதிர்த்து நின்று அப்பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும்.

ஒருவன் தான் இந்த சூழலை சமாளித்து விடுவேன் என மன ஊக்கம் கொண்டு பிரச்சனையை தீர்க்க செயலை ஆற்ற வேண்டும்.

இனி இது போன்ற எந்த ஒரு துன்பமும் என் வாழ்வில் வந்தாலும் அதை சமாளித்து விடுவேன் என்று மன தைரியத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்.

மன வலிமையுடன் இருந்தால் மட்டுமே எக்காரியத்தையும் செய்ய முடியும் என்ற துணிவு ஆனது மனதில் பிறக்கும்.

ஒரு மனிதனுக்கு துணிவு மட்டும் இருந்தால் போதும் எதையும் தாங்கும் மன பக்குவமானது உண்டாகி விடும்.

மண்ணில் பிறந்தே சாதிக்க தான் என் கருதி, கவலையை மறந்து வெற்றி கொடியை நட முயற்சியை தொடருங்கள்.

நன்றி!

 

– கவிதை குழல்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *