Warning: Uninitialized string offset 0 in /home/p95fc9smvxat/public_html/wp-content/plugins/seo-by-rank-math/vendor/mythemeshop/wordpress-helpers/src/helpers/class-str.php on line 235
முக மலர்ச்சி!| Kavithai Kuzhal - Tamil Kavithaigal

முக மலர்ச்சி!| Kavithai Kuzhal – Tamil Kavithaigal

முக மலர்ச்சி!| Kavithai Kuzhal – Tamil Kavithaigal

வணக்கம்!

கவிதை குழலின் மூலமாக இன்று “முக மலர்ச்சி” என்ற தலைப்பை எடுத்துக்கொண்டு ஒருவன் முகமலர்ச்சியுடன் வாழ வேண்டியது ஏன்? என்பதை பற்றி இப்பதிவின் மூலமாக அறியலாம்.

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!” என்பார்கள். உள்ளத்தில் என்ன இருக்கின்றதோ அதுவே முகத்தின் வாயிலாகவும் வெளிப்படும்.

இன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் முக மலர்ந்து பேசுபவோர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகின்றது. 

ஒருவர் முகத்தில் வெளிப்படும் உணர்வுகளைக் கண்டு மகிழ்ச்சியாக பேசினால் மட்டுமே அதிக நேரம் பேச முடியும். முகத்தில் விருப்பமில்லாமல் பேசியதை கண்டால் அவரிடத்தில் பேச இயலாது.

முகமலர்ச்சியுடன் பழகி வருவதால் மட்டும் தான் உறவுகள் எப்போதும் நீடித்து இருக்கும்.

ஏன் எவரிடத்திலும் முகம் மலர்ச்சியானது தோன்றுவதில்லை என்பதை அறிந்தால் தான், முகமலர்ச்சிக்கான முக்கியத்துவத்தை நம்மால் உணர முடியும்.

முக மலர்ச்சி என்பது உள்ளத்தில் மகிழ்ச்சியானது ஏற்படும்போது, அம்மகிழ்ச்சியானது முகத்தில் வெளிப்படுவதே ஆகும்.

முக மலர்ச்சி தோன்ற ஏராளமான நிகழ்வுகள் நம் வாழ்வில் தினம்தோறும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

கணவன் தன் மனைவியை பாராட்டுதல், பெற்றோர் பிள்ளைகளிடம் மனம்விட்டுப் பேசுதல், பிள்ளைகள் பெற்றோரிடம் ஆலோசனைகளைக் கேட்டல்,  குழந்தைகள் தாத்தா பாட்டியிடம் கதைகள் கேட்டல், உறவினர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தல் இது போன்ற ஏராளமான நிகழ்வுகள் ஒருவரிடத்தில் நிகழ்ந்து வந்தால் மனதில் எப்போதும் மகிழ்ச்சியானது உள்ளத்தில் ஏற்படும்.

இதனால் தான் ஒருவரது உள்ள மகிழ்ச்சியானது முகத்தில் வெளிப்படுகிறது.

வாழ்க்கை என்பது இன்பம், துன்பம் ஆகிய இரண்டும் கலந்ததே. பிறகு எப்படி மகிழ்ச்சியாகவே இருக்க முடியும்? என்ற கேள்வியானது உங்களிடத்தில் எழும்.

உண்மையைச் சொல்லப் போனால் இன்பம் மற்றும் துன்பம் ஆகியவற்றிற்கு நாமே காரணமாகும்.

நமது மனமானது ஒரு செயலை எவ்விதத்தில் கையாளுகின்றதோ அதனைப் பொறுத்தே அச்செயலில் மகிழ்ச்சியும் துன்பமும் உண்டாகின்றது.

ஒரு உதாரணத்தின் மூலமாக பார்த்தால் இவற்றை இன்னும் எளிதாக புரிந்து கொள்ளலாம்.

தந்தையானவர் தன் மகன் செய்த தவறுக்காக அவனை திட்டி விடுகிறார்.

இந்த சூழ்நிலையில் மகன் தன்னை திட்டியது தந்தை தானே. அவர் வெறுமனே நம்மை திட்டுவதில்லை. நான் செய்த தவறை இனி செய்யக்கூடாது என்று கருதியதால் தான் என்னை திட்டினார் என்று அவனது மனம் உணர்ந்தால், தந்தையின் மீது கொண்ட அன்பானது மேலும் அதிகரிக்கும்.

அதைவிடுத்து என் தந்தைக்கு என் மீது பாசம் இல்லை, என் மீது அக்கறையும் இல்லை என மனதில் நினைத்து, உள்ளத்தில் கோபம் கொண்டால், எப்போதும் அவனது உள்ளத்தில் வெறுப்புணர்வு தான் ஏற்படும். இதனால் தான் முகமலர்ச்சி ஏற்படுவதில்லை.

இவற்றையெல்லாம் தவிர்த்து மனிதனானவன் இன்பம் மற்றும் துன்பம் ஏற்படும் வேளையில் தன் மனதை எவ்விடத்திலும் சாய்க்காமல் ஒரே மாதிரியாக நிலை கொண்டால், அவனது வாழ்க்கையானது என்றும் பேரின்ப பாதையிலே அழைத்து செல்லும்.

இதிலிருந்து ஒரு மனிதன், தனது சூழ்நிலையை எவ்வாறு கையாளுகின்றனோ அதனைப் பொறுத்தே இன்ப, துன்பத்தை அடைகின்றான் என்பதை உணர்ந்திருப்பீர்கள்.

முகமலர்ச்சியும் அவனது உள்ளத்தை பொறுத்தே அவனிடத்திலும் ஏற்படுகின்றது.

ஒரு சூழ்நிலையில் ஒருவர் செய்த தீங்கினை எப்போதும் நினைத்து கொண்டே இருப்பதுதான், இந்த முகமலர்ச்சியானது அவரைக் கண்டதும் வெளிப்படாததற்கு காரணமாகும்.

ஒருவர் தமக்கு செய்த தீங்கினை மறத்தலே எப்போதும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செல்லும்.

அதைவிடுத்து வெறுப்புணர்வை மேற்கொண்டு வந்தால், அது தமக்கு தான் நீங்காத துன்பத்தை தரும்.

உலகில் தவறு செய்யாதவர்கள் என்று எவருமில்லை. மனித வாழ்வில் தவறு செய்தால் அத்தவறை மீண்டும் செய்யாமல் இருத்தல் வேண்டும்.

மனித வாழ்வே அனைவரும் இணைந்து வாழத் தான்.

ஒருவர் செய்த தீமையானது, உள்ளத்தில் நீங்காத வலியை ஏற்படுத்தினாலும் அவரை மன்னித்து, செய்த தீங்கினை மறத்தலே தமக்கு நன்மையைத் தரும். அதுவே உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

முக மலர்ச்சி ஆனது எப்போது உருவாகும் என்றால் உள்ளத்தில் எவ்விதத் துன்பமும் இல்லாதபோதே ஆகும்.

அனைவரிடத்திலும் முகமலர்ச்சியுடன் கலந்து பேசுவதே எல்லோருக்கும் நன்மையை அளிக்கும்.

முகமலர்ச்சியுடன் பேச கற்றுக்கொள்ள வேண்டியது ஒரு சிறந்த கலையாகும்.

நன்றி!

-கவிதை குழல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *