திரும்பி பார்ப்பார்கள்!
இவ்வுலகினர் உங்களை திரும்பி
பார்க்க வேண்டுமெனில்,
அதற்கு முதலில் நீங்கள் யாரையும்
கண்டு கொள்ளாமல்
உங்கள் பாதையில் பயணிப்பது
மிகவும் அவசியம்…
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
எல்லோருக்கும் தான் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் முன்னேறுவதற்கு தான் என்ன செய்ய வேண்டும் என்பதனை பற்றி சிந்திக்கின்றோமா?
ஒவ்வொருவருக்கும் உரிய பாதையானது இருக்கும். அதை விடுத்து நாம் மற்றவர்களின் பாதையை பார்த்து கொண்டு இருந்தால் அது நம் பாதை ஆகி விடும்? என்ன.
தனது பாதையை அறிந்து அதில் முயற்சி செய்து முன்னேற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நன்றி