பணம் தான் முக்கியமா?
பணம் தான் முக்கியமா?
ஒவ்வொருவரும் பணம்
சம்பாதிக்க வேண்டும்.
ஆனால், இயற்கை சீற்றத்தைப்
பயன்படுத்தி அல்ல.
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
வணக்கம்!
ஒவ்வொருவரும் பணம் சம்பாதித்து அவரது வாழ்வை வளமாக்க உழைக்க வேண்டும்.
ஆனால், இயற்கையால் மனிதனுக்கு பாதிப்பு ஏற்படும் போது, அப்போது ஒரு மனிதனுக்கு தேவையான உதவியை மற்றொருவர் செய்ய வேண்டும்.
இச்செயலே அறம் சார்ந்த செயலாகும்.
ஆனால், எவனோ ஒருவருவனுக்கு பிரச்சனை ஏற்பட்டால் எனக்கென்ன? என்று நினைத்து, தன்னிடம் இருக்கும் பொருளை அதிக இலாபத்திற்காக விற்பது என்பது சரியானதல்ல.
இச்செயலானது தனக்கும் ஒரு நாள் நடந்தால், அதன் விளைவு எவ்வாறு இருக்கும் என்று சற்று சிந்தித்து பாருங்கள்.
நன்றி…
– கவிதை குழல்.