பணிவுடைமை! | Kavitahi Kuzhal – Tamil Kavithaigal
வணக்கம் !
கவிதை குழலின் வாயிலாக ஒருவன் பணிவுடைமையால் அடையும் மேன்மையை பற்றி இப்பதிவில் காணலாம்.
உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் மேன்மை அடைய வேண்டுமெனில் கல்வி எவ்வளவு முக்கியமோ அதுபோலவே ஒழுக்கத்தின் பண்பான பணிவுடைமையும் மிகவும் முக்கியம்.
பணிவுடைமை என்பது ஒரு நல்ல குணமாகும். ஒருவன் பணிவுடன் நடந்தால் மட்டும் தான் அவன் உலகத்தால் மதிக்கப்படுவான் . பணிவுடைமை இல்லை எனில் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி அவனை யாரும் மதிக்க மாட்டார்கள். ஒவ்வொருவரும் கல்வியை கற்க வேண்டும் என்றால் அங்கு பணிவுடன் இருத்தலும் அவசியமாகும்.
பணிவுடன் பேசினால் மட்டும்தான் அனைவரிடத்திலும் நற்பெயர் ஆனது கிட்டும். இல்லை என்றால் அனைவரும் இகழ்ந்து தான் பேசுவார்கள்.
ஒரு உதாரணத்தின் வாயிலாக பணிவுடைமை பற்றி இன்னும் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
ஒரு ஊரில் ராமு, சோமு என்ற பெயரில் இருவர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் தங்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே நண்பர்களாவார்கள். இப்போது இருவரும் இளைஞர்களாக உள்ளனர்.
அவர்கள் இருவரும் தங்கள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு நெடுநாட்களாக பார்க்கவே இல்லை. ஏனென்றால், அவர்கள் தனது கல்லூரிப் படிப்பை வெவ்வேறு இடங்களில் பயின்றார்கள்.
கல்லூரி படிப்பை முடித்ததும், அவர்கள் இருவரும் தங்கள் சொந்த ஊருக்கு வருகின்றனர். அந்த ஊர் மக்கள் அவர்கள் இருவரையும் நல்மதிப்புடன் வரவேற்கிறார்கள்.
எந்த ஊராக இருந்தாலும் சரி. கல்வி பயின்றவரை நன்கு மதித்து வரவேற்கும் பழக்கமானது அனைவருக்குமே உள்ளது.
ராமுவும் சோமுவும் அவரவரது வீட்டிற்கு செல்கின்றனர்.
ராமு ஆனவன் தன்னை எல்லோரும் மதிக்க வேண்டும் என்று ஆசை கொள்பவன். நான் தான் கல்வியியல் சிறந்தவன் என்ற கர்வமானது அவனிடத்தில் மேலொங்கி இருந்தது.
இதனால் அவன் கல்லூரியிலே சக மாணவர்களுக்கு மிகுந்த துன்பத்தைத் தந்தான். யாரையும் மதிக்கமால் தான் தான் எல்லாம் என்று அகங்காரம் கொண்டு எப்படியோ கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து விட்டான்.
சோமுவும் தன் கல்லூரியில் நன்கு படிக்கக்கூடிய மாணவன்தான். ஆனால் அவனிடம் ராமுவை விட ஒரு குணமானது மேலோங்கி இருந்தது. அது என்னவென்றால் அனைவரையும் நன்கு மதித்து பணிவுடன் நடத்தலே ஆகும். இதனால் சோமு அனைவரிடத்திலும் நற்பெயர் பெற்றான்.
இவ்விரு நபர்களும் இந்த குணங்களை கொண்டே தங்களுடைய ஊருக்கு வந்தடைந்தனர். ஒரு நாள் ஊர் தலைவர் இருவரையும் அழைத்து, நீங்கள் நன்கு கல்வி பயின்று வந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் என்று கூறி வாழ்த்தினார்.
இது மட்டுமில்லாமல் அவர்களிடத்தில் ஒரு கோரிக்கையையும் ஊர் தலைவர் வைத்தார். நீங்கள் இருவரும் தங்கள் ஊரை வளமாக்க தகுந்த வழிகளை கூறுங்கள் என்றார்.
உடனே ராமு, இவ்வளவு தானா! பாருங்க தலைவரே! நான் வழி கூறுகின்றேன் என கூற ஆரம்பித்தான். அவனது பேச்சில் ஆணவமானது கலந்து இருந்தது. பேச்சில் மட்டும் தான் உயர்வு இருந்தே தவிர, அவன் கூறிய வழியில் உயர்வு இல்லை.
ஊர் தலைவரும் அவன் கூறுபவற்றை அமைதியாக கேட்டு கொண்டிருந்தார்.
ராமுவுடைய உரையாடலும் நிறைவு பெற்றது.
உடனே சோமுவை ஊரை வளமாக்க உன் வழியை கூறப்ப என்றார்.
சோமு தன் வழியை நிதானமாகவும், பணிவுடனும் அவருக்கு புரியும் வகையில் கூறினான். சோமுவின் உரையாடல் ஆனது ஊர் தலைவருக்கு மன மகழ்ச்சியை அளித்தது.
ராமு சோமுவை பார்த்து, பிள்ளைகளே! நான் உங்களுக்கு ஒரு அறிவுரையை கூற போகின்றேன்! கேட்டு கொள்ளுங்கள் என்றார்.
நீங்கள் இருவரும் கல்வியை நன்கு பயின்றவர்கள். ஆதலால் கல்வி பயின்றவருக்கு அறிவு மட்டும் இருந்தால் போதாது. அனைவரிடத்திலும் பணிவுடன் நடத்தல் வேண்டும் என்றார்.
இதனை நான் யார்க்கு கூறினேன் என்பதை உணர்ந்து இருப்பீர்கள்.
இனி இத்தவறை செய்யாதீர்கள் என்று கூறி வழி அனுப்பி வைத்தார்.
அன்றிலிருந்து ராமு தனது தவறை உணர்ந்து அனைவரிடத்திலும் பணிவுடன் நடக்க ஆரம்பித்தான்.
இதிலிருந்து ஒன்றை உணர்ந்து இருப்பீர்கள்.
பணிவுடன் வாழ்வது மட்டுமே அனைவருக்கும் தங்கள் மீது மதிப்பை உண்டாகச் செய்யும்.
நன்றி!
-கவிதை குழல்