புகழ்! – கவிதை | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
புகழ் கவிதை:
புகழுடன் வாழ வேண்டுமெனில்,
அரிதான செயலைச் செய்!
புகழ் நிலை பெற வேண்டுமெனில்,
இழிவான சொல்லை தவிர்!
– கவிதை குழல்

கவிதையின் விளக்கம்:
வணக்கம்!
இதுவரை நாம் கவிதைகளை குறுகிய வரிகளில் தான் படித்து அதன் பொருளை உணர்ந்து வந்திருக்கிறோம்.
கவிதைக்குள் மறைந்திருக்கும் ஆழ்ந்த பொருளையும் உணர வேண்டும் அல்லவா. அதற்காக தான், ஒரு புதிய முயற்சியாக கவிதையின் விளக்கம் பிரிவானது இங்கு இடம் பெற்றுள்ளது.
இன்றைய கவிதையானது புகழ் என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.
மனிதனானவன் புகழடைய வேண்டும் எனில், என்னவெல்லாம் செய்ய வேண்டும் மற்றும் செய்யக் கூடாது என்பதைப் பற்றித்தான் இக்கவிதையானது விளக்குகின்றது.
இக்கவிதையைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
புகழை அனைவரும் அடைய வேண்டும் என்று தான் எண்ணுவார்கள்.
புகழ் என்பது ஒவ்வொருவருக்கும் அவரது செயலின் வாயிலாக கிடைப்பதாகும்.
ஒவ்வொருவரும் தான் இந்த உலகில் தன்னுடைய புகழை நிலை பெறச் செய்ய வேண்டும் என்பதற்காகவே தினந்தோறும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
புகழ் என்பது மேற்கொண்ட செயலால் மட்டும்தான் உருவாவதாகும்.
ஒருவன் தன்னுடைய திறமையை அறிந்து அதற்கு ஏற்றவாறு செயலை மட்டுமே தொடங்க வேண்டும்.
அவ்வாறு மேற்கொண்டால் மட்டுமே அச்செயலை தொடர்ந்து செய்ய முடியும்.
இல்லையென்றால் அச்செயலை பாதியில் விட்டு விட நேரிடும்.
ஒருவன் ஒரு செயலைத் தொடங்கினால் மட்டும் போதாது. எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் அச்செயலை தொடர்ந்து செய்து கொண்டே வர வேண்டும். அப்போதுதான் அச்செயலின் மூலமாக வெற்றியை அடைய முடியும்.
ஒரு செயலில் அடையும் வெற்றியே புகழை உண்டாக்குவதற்கான முக்கிய காரணமாகும்.
எனவே புகழ் பெற வேண்டுமெனில், யாரும் செய்வதற்கு அரிதான செயல்களையே மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரும் மேற்கொள்ளப்படும் செயலானது அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும்.
மக்களின் தேவையை பூர்த்தி செய்தால் மட்டுமே மேற்கொண்ட செயலில் தனது கொடியை நிலைநாட்ட முடியும்.
எனவே செய்யும் செயலானது தேவைகளைப் பொறுத்தும் அமைய வேண்டும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
இதுவரை, ஒருவன் புகழ் அடைய வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்த்தோம் .
இனி ஒருவன் புகழ் அடைந்தால் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி பார்க்கலாம்.
முதலில் நாம் மேற்கொண்ட செயலானது, எதன் அடிப்படையாக கொண்டு வளர்ந்தாலும், அதனை எக்காலத்திலும் எந்த சூழ்நிலையாக இருந்தாலும், சரி இழிவுபடுத்தி பேசுதல் கூடாது. அதாவது, தவறாக பேசுதல் கூடாது.
அவ்வாறு வாய்தவறி இழைத்த தவறான சொல்லானது மிகப்பெரிய பழிச்சொல்லுக்கு ஆளாக்கிவிடும்.
இதுவரை அனைவராலும் நன்கு மதிக்கப்பட்டாலும், ஒரு முறை செய்த சிறு தவறினால் அது அனைத்தையும் தலைகீழாக மாற்றிவிடும்.
எனவே உயர்ந்த மதிக்கப்படும் இடத்தில் இருந்தால், எச்செயலை செய்வதாக இருந்தாலும் சிந்தித்து தான் செயல்பட வேண்டும்.
ஒருவன் நிதானமாக, ஆழ்ந்த சிந்தனையால் செய்யும் செயலானது என்றும் தவறானதாக மாற வாய்ப்பு இல்லை. எனவே சிந்தித்து தான் செயல்பட வேண்டும்.
வாழும் உலகத்தில் எந்த ஒரு செயலை மேற்கொண்டாலும் அந்த செயலில் விமர்சனங்கள் வைக்கத்தான் படும்.
புகழுடன் வாழ வேண்டுமெனில் விமர்சனங்களை கண்டு கோபப்பட்டு இழிவான சொல்லை பேசமால் இருத்தல் வேண்டும்.
இழிவான சொல்லை பேசினால் இதுவரை கிடைத்து வந்த அனைத்துப் நற்பெயர்களும் கெட்டுவிடும்.
ஒருவன் இழிவாக விமர்சனம் செய்து கொண்டிருக்கும் போது, விமர்சனம் செய்யாமல் இருக்கலாமா? என்ற கேள்வியானது எழும்.
விமர்சனம் செய்தவரை இழிவான சொற்களைப் பயன்படுத்தி பேசுதல் கூடாதே தவிர அதற்கும் பதில் அளிக்கக் கூடாது என்பது இல்லை.
எனவே சமூகத்தில் எதை பேசுவதாக இருந்தாலும் சிந்தித்து தான் பேச வேண்டும்.
இக்கவிதையின் உள்ளார்ந்த பொருளை உணர்ந்து இருப்பீர்கள்.
நன்றி…
– கவிதை குழல்