புரிந்து உணர்ந்து வாழ்!
கவிதைகள்
show
புரிந்து உணர்ந்து வாழ்! – கவிதை குழல்:
நிகழும் அனைத்தும் வரையறுக்கப்பட்டாலும்
வரையறுக்கப்பட்டதை நிகழ்த்துபவன்
நீயே என்பதை புரிந்துக்கொள்.
– கவிதை குழல்.
கவிதை விளக்கம்:
ஒவ்வொருவரும் அவரவர் செய்த வினைப்பயன் அதாவது, கர்ம வினைக்கேற்ப இவ்வுலகத்தில் பயனை அடைவார்கள் என்று கூறுவார்கள்.
விதியின் காரணமாக, வாழ்க்கையில் பல இன்னல்கள் உருவாகினாலும், அந்த இன்னல்களை ஏற்பட காரணம் தான் தான் என்பதை உணர்ந்துக் கொள்ள வேண்டும்.
வாழ்வில் ஏற்படும் இன்னல்களை தனது அறிவின் துணைக்கொண்டு, போக்கி கொள்ளலாம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சிலர், எனக்கு மட்டும் தான் பிரச்சனைகள் உருவாகின்றது என்று, தன்னையும், தனது வாழ்வையும் வெறுக்கும் நிலைக்கு போய்விடுகிறார்கள்.
”மனிதனாக பிறந்ததே அரிது” என்பதை உணர்ந்து, வாழ்வை நேசித்து வாழுங்கள்.
நன்றி!
– கவிதை குழல்.