பெண்ணின் காதல் கவிதை! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
பெண்ணின் காதல் கவிதை! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
சிறு பொழுதும் உன்னை காணாமல் இருக்க வேண்டாம்.
இமை நொடியும் உன்னை காணாமல் இருக்க வேண்டாம்.
என்னுடனே இருப்பாயா! என்னை களவாடியவனே.
– கவிதை குழல்
கவிதை விளக்கம்:
பெண்ணின் காதல் கவிதை! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
வணக்கம்!
காதல், இருவரது உள்ளத்தில் இன்பத்தை ஏற்படுத்தும் உணர்ச்சியாகும். வாழக்கையை வாழ உறவால் ஏற்படும் நம்மிக்கையும் ஆகும்.
காதல் ஒன்றே இல்லற வாழ்வை மகிழ்ச்சியாக்க செய்யும்.
ஆணினது காதலாது எளிதில் வெளிப்பட்டு விடும். பெண்ணின் காதலோ அவ்வளவு எளிதாக வெளிப்படுவதில்லை. ஆனால், அவளிடத்தில் காதலோ உண்டு.
பெண் ஆனவள், தன்னுடைய காதலன் தன்னோடு நெருங்கி இருக்கும் வேளையிலே, அன்பை வெளிப்படுத்துகிறாள்.
காதலன் எப்போதும் தன்னுடனே இருக்க வேண்டும் என்றும் ஆசை கொள்பவள். காதலிக்கும் போது சந்திக்கும் காலமானது, இருவருக்கும் குறைவாகவே காணப்படுகின்றது.
காதலனை கானும் தருவாயில், உன்னை எப்போதும் நான் பார்த்து கொண்டே இருக்கும் வேண்டும், உன்னை பிரியாமல் எப்போதும் நான் இருக்க வேண்டும் என அன்பு வார்த்தைகளைக் கூறி, தனது அன்பை வெளிப்படுத்துவாள்.
ஆணும், பெண்ணும் காதலிக்கும் தருவாயில், பெண்ணானவள் வெளிப்படுத்தும் அன்பே இக்கவிதையாகும்.
நன்றி.
– கவிதை குழல்.