காலமும் கருவியும்! | Kavithai Kuzhal – Tamil Kavithaigal

வணக்கம்! 

ஒரு செயலைத் துவங்கும்போது காலம் எவ்வளவு முக்கியமோ அதுபோலவே, செயலை செய்ய கருவியும் முக்கியமாகும்.

செயலை தொடங்குவதற்கு காலமும் கருவியும் இன்றியமையாதது என்பதை பற்றி தான் இப்பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

இதனை பற்றி முழுமையாக அறிந்தால் தான் நாம் மேற்கொண்ட செயலில் வெற்றியை அடைய முடியும்.

முதலில் செயலை தொடங்குவதற்கான நோக்கத்தைப் பற்றி அறிவோம்.

செயல் என்பது தன்னலம் கருதாமல் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் தொடங்க வேண்டும்.

ஒரு செயலை தேர்ந்தெடுக்க பல முயற்சிகள் மேற்கொண்டாலும், அதனை செயல்படுத்த காலத்தை அறிய வேண்டியது அவசியம் தானே.

செயலானது மேற்கொள்ளும் போது மன வலிமையுடன் இருத்தல் வேண்டும். இல்லை என்றால், அச்செயலை சரிவர செய்ய இயலாது. 

இனி செயலை செய்ய காலமானது எவ்வளவு முக்கியம் என்பதை காணலாம்.

காலம் அறிந்து செயலை மேற்கொண்டால் தான் எண்ணியதை அடைய முடியும். காலத்தை பொருத்தே, உலகில் தேவையையும் அதிகரிக்கிறது.

மக்களின் தேவையை யார் பூர்த்தி செய்கிறார்களோ, அவர்களே மக்களின் மனதில் நிலை பெற்று வாழ்கிறார்கள்.

எனவே காலத்தை பொருத்து தான் செயலை தொடங்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரு செயலை செயல்படுத்த காலம் எவ்வளவு முக்கியமோ, அதைவிட அச்செயலை செய்வதற்கான கருவியும் இன்றியமையாததாகும்.

செயலுக்கு தேவையான காலத்தையும் கருவியும் பற்றி ஒரு நிகழ்வின் வாயிலாக இன்னும் எளிதாக புரிந்து கொள்ளலாம்.

ஒரு ஊரில் ராமு என்ற நபர் வசித்து வருகிறார். அவர் தேனீக்களை வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். தேனீக்களில் இருந்து தேன் எடுத்து அதனை விற்பனை செய்து வருகிறார்.

இதனால் அவரது செயலால் ஊர் மக்கள் அனைவரும் அதித நன்மையை அடைகின்றனர்.

தேன் மூலம் கிடைக்கும் மருத்துவ குணங்களை பற்றி அறிந்திருக்றோம் அல்லவா.

சரி. ராமு தனது தொழிலை விரிவாக்க செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.

இதனால் அவருக்கு, தேனீக்கள் வளர்ப்பிற்கு அதிக தேனீக்கள் தேவைப்படுகிறது.

எனவே தேனீக்களை பிடிப்பதற்காக அதனை தேடி, காட்டிற்கு செல்கிறார்.

தேனீக்கள் எங்கு இருக்கின்றன என்பதை காட்டில் உள்ள அனைத்து மரங்களிலும் தேடி பார்க்கிறார்.

ஆனால் மரங்களில் தேனீக்கள் காணப்படவில்லை.

பிறகு கல் இடுக்குகளில் தேனீக்கள் இருக்கும் என்று எண்ணி அங்கு பார்க்கச் செல்கிறார்.

நெடுநேரம் கழித்து,ஒரு கல் இடுக்கில் தேனீக்கள் கூட்டை கண்டு கொள்கிறார்.

தேனீக்களைப் பிடித்து எடுத்து வருவதற்காக கூண்டையும், அதனை எடுக்க தக்க கருவிகளையும் தன்னிடத்தில் வைத்திருக்கிறார்.

தான் கொண்டு வந்த உபகரணங்களை கொண்டு தேனீக்களை பிடிக்க ஆரம்பிக்கிறார்.

தேனீ கூட்டில் ஒரே ஒரு ராணி தேனீ தான் இருக்கும் என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

தேனீக்களை ஒவ்வொன்றாக பிடித்து கொண்டிருக்கும் போது ராணி தேனீயானது தப்பித்து விடுகிறது.

இதனை தொடர்ந்து கூட்டில் இருந்த பாதி தேனிக்கள், ராணி தேனீயை நோக்கி சென்றுவிட்டன.

இதனால் அவர் தேனீக்கள் பிடிக்க வந்த செயலானது நின்று போய் விட்டது.

ஒரு தேன் கூடானது உருவாக வேண்டுமென்றால், அதில் ராணி தேனீயானது இருக்க வேண்டும். அதாவது ஆட்சி செய்பவன் இருந்தால் தான், ஒரு கோட்டையானது உருவாக்கப்படும் அல்லவா. அதுபோலத்தான் தேன் கூடும் உருவாக்கப்படும் செயலாகும்.

பறந்து சென்ற தேனீக்கள் மற்றொரு இடத்தில் கூண்டினை துரித கணத்தில் உருவாக்கி விடுகிறது. 

ராமு அந்த தேன் கூட்டையும் கண்டு கொள்கிறார். அனைத்து தேனீக்களையும் பிடிக்க வேண்டுமெனில், சரியான காலம் வேண்டும். எனவே தேனீக்களைப் பிடிக்க இரவு நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.

இரவு வந்த உடன் தான் கொண்டு வந்த உபகரனத்தை கொண்டு அனைத்து தேனீக்களையும் பிடித்து வீட்டில் வளர்ப்பதறகாக எடுத்து செல்கிறார்.

இந்த நிகழ்வு மூலம் ஒரு செயலை செய்யும் போது காலமும் கருவியும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து இருப்பிர்கள்.

எனவே எச்செயலை செய்வதற்கு முன்பாகவும் காலமறிந்து தக்க கருவியுடன் செய்ய வேண்டும்.

நன்றி.

-கவிதை குழல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *