நேரம்! – கவிதை | Kavithai Kuzhal – Tamil Kavithaigal

நேரம்!

நேரத்தை தன் வசம்

அடைய செய்வதால் மட்டுமே 

வெற்றியின் இலக்கை

எளிதில் அடைய முடியும்.

–  கவிதை குழல்

நேரம்

கவிதையின் விளக்கம்:

இக்கவிதையானது ஒருவன் நேரத்தை எவ்வாறு கையாள வேண்டும் மற்றும் நேரத்தை பொறுத்து தான் வெற்றியின் இலக்கும் உள்ளது என்பதை பற்றி விவரிக்கின்றது. 

இக்கவிதையின் உள்ளார்ந்த பொருளை இனி பார்க்கலாம்.

நேரம் தான் எந்த ஒரு செயலை மேற்கொள்வதற்கும் இன்றியமையாததாகும். அதாவது நேரத்தை பொருத்து செயலை மேற்கொண்டால் தான், எண்ணிய  இலக்கையும் அடைய முடியும்.

ஏனென்றால் நேரமானது அனைத்தையும் தீர்மானிக்கவல்லது.

உலகில் ஏற்படும் கால சூழ்நிலைகளால் ஒரு செயலை மேற்கொண்டு அதில் வெற்றி அடைந்தவர்களை நீங்கள் கண்கூடாக கண்டு இருப்பீர்கள்.

நேரம் ஆனது எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு நிகழ்வின் வாயிலாக காண்பதன் மூலம் நேரத்தை தன் வசம் வைத்துக் கொள்ளலாம்.

அது ஒரு அழகிய கிராமம் ஆகும். அந்த கிராமத்தில் உள்ள மக்கள், விவசாயத்தை முதன்மை தொழிலாக மேற்கொண்டு வந்தார்கள். 

விவசாயத்திற்கு ஏற்ற மழைக்காலமானது அந்த ஊரில் உருவானது. 

இதுவரை வறட்சியாக இருந்த ஊரானது, இனியாவது பசுமையாக மாறும் என மகழ்ச்சி அடைந்தனர்.

பருவத்தின் சூழலால் அவ்வூரில் இதுவரை கண்டிராத அளவு மழையும் பெய்தது. மக்களின் மகழ்ச்சி இரட்டிப்பாகியது. 

இது தான் கிடைத்தற்கு அரிய தருணம் எனக் கருதி, ஊரில் உள்ள மக்கள் தாங்கள் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என முடிவுசெய்தனர் செய்தனர்.

மழையின் உதவியால் பயிர்களை பயிரிட்டனர். அந்த வருடமானது விளைச்சலும் அதிகமாகியது. 

விளைச்சலை கண்டு விவசாயிகள் மகழ்ச்சியுற்றனர். இதனால் குடும்பத்தின் சூழலை சமாளிக்க போதிய வருவாயும் கிடைத்தது.

இந்த நிகழ்வின் மூலமாக ஓருவன் நேரத்தை அறிந்து செயல் பட்டதால் அடைந்த பயனை அறிந்து இருப்பீர்கள்.

இச்செயலை போன்றதுதான் எந்த ஒரு செயலை தொடங்கினாலும் நேரத்தை மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஒருவேளை அவ்வூரில் உள்ள மக்கள் மழை வரும் போது தான் விவசாயத்தை தொடங்கவில்லை என்றால் அவர்களின் வாழ்வாதர நிலைமையே தலைகீழாக மாறியிருக்கும். 

காலம் வரும் போது சரியாக கவனித்து விவசாயத்தை தொடங்கியதால் தான் அவர்கள் இல்ல சூழல் மகிழ்ச்சியாக மாறியது.

ஒவ்வொருவரும் உழைக்கத் தொடங்குவது பணத்தை சம்பாதிக்க தான். உழைக்கின்ற உழைப்பை நேரத்தை அறிந்து உழைக்க தொடங்கினால் அதன் மூலம் அடையும் பலன் தான் ஏராளம்.

எனவே பலன் பெற வேண்டுமெனில் சரியான நேரமும் வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பலன் என்பது வெறும் நேரத்தை மட்டும் சார்ந்தது அல்ல, மேற்கொள்ளப்படும் செயலையும் சார்ந்தது ஆகும்.

செய்யும் செயலானது அனைவரின் தேவையை பூர்த்தி செய்வதாக இருத்தலும் அவசியம். தேவை என்பதை நேரத்தை பொறுத்தே உருவாவதாகும்.

செயலுக்கும் காலத்திற்கும் உள்ள தொடர்பை புரிந்து கொண்டால் மட்டும் தான் மேற்கொண்ட செயலில் இலக்கை அடைய முடியும்.

செயலில் அடையும் இலக்கே ஒருவரது வெற்றியை பறைசாற்றும்.

எனவே நேரத்தை தன் வசம் கொண்டால் மட்டும் தான் இலக்கை அடைய முடியும் என்பதை உணர்ந்து இருப்பீர்கள்.

நன்றி..

– கவிதை குழல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *