பொருள் – அறிவு | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
பொருள் – அறிவு | Kavithai Kuzhal – Tamil Kavithaigal
வணக்கம்!
அறிவு என்பது ஒரு மிகச்சிறந்த ஆற்றலாகும். அறிவாற்றலை எவ்வளவு பெருக்கிக் கொள்கிறோமோ அவ்வளவு நன்மை வாழ்வில் அடைவோம்.
அறிவு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் மட்டும் தான் நம்முடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும்.
அறிவைப் பற்றி நம் முன்னோர்கள் பல வகையாக குறிப்பிட்டுள்ளனர். இன்றைய காலத்திற்கு ஏற்ப அறிவை எவ்வாறு பயன்படுத்தலாம்? என்பதையும் பார்க்கலாம்.
பொதுவாக அறிவை மூன்று வகையாக கூறுவர்.
ஒன்று இயற்கை அறிவு.
அதாவது இயல்பாக அமைந்த அறிவாகும்.
இரண்டாவது செயற்கை அறிவு.
இந்த அறிவானது கல்வியாலும் அல்லது நூல்கள் படிப்பதாலும் உண்டாவதாகும்.
மூன்றாவது உலக அறிவாகும்.
உலக அழிவு இயற்கையுடனும் கல்வி அறிவுடனும் இணைந்து இருப்பதாகும்.
ஒருவன் அறிவை புரிந்து கொண்டால் மட்டும் தான் அதை எங்கு பயன்படுத்த முடியும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
உலகத்தில் அறிவு ஒன்றே பல அற்புத செயல்களை செய்ய துணைபுரியும்.
அறிவின் மேன்மையால் மட்டும் தான் உலக மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
எப்பொருளை கொடுத்தாலும் அறிவை தேடி அடைந்து கொள்ள வேண்டும்.
அறிவின் துணை கொண்டு தான் உலக மக்கள் அனைவரும் பொருளைத் தேடிக் கொள்கின்றனர்.
அறிவு மேலும் மேலும் நம்முடைய பொருளை ஆக்கவும் செய்யும் மற்றும் நமக்கு நம்மை பாதுகாக்கவும் செய்யும்.
அறிவு என்றால் என்ன ? மற்றும் அறிவின் மூலம் என்ன செய்ய முடியும்? மற்றும் அறிவின் மூலம் கிடைக்கும் பலன்கள் என்ன?
இதுபோன்ற பல கேள்விகளுக்கு கவிதை குழல் வாயிலாக “அறிவு” என்ற பிரிவின் மூலமாக விடையை அறியலாம்.கீழ்க்காணும் கவிதைகள், எளிமையாகவும், ஆழ்ந்த பொருளுடனும் இருக்கும்.
1.அறிவு ” சக்தி”
அறிவு மட்டுமே வாழ்க்கையை
மேம்படுத்தும் சக்தி வாய்ந்தது.
எனவே, அறிவை எப்போதும்
தேடி அடைய வேண்டும்.
– கவிதை குழல்

2. அறிவு “சுயசோதனை”
பலம் எதுவென அறிந்து
பயன்படுத்த வேண்டும்.
பலவீனம் எதுவென
அறிந்து போக்கி கொள்ள வேண்டும்.
– கவிதை குழல்

3. உண்மையை அறிந்து கொள்!
சரியான தகவல்களை
சரியான
நபர்களிடமிருந்து அறிந்து கொள்ளுங்கள்
மற்றும் கற்று கொடுங்கள்…
-கவிதை குழல்

4.உலக அறிவு
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வில்
உலக அறிவை பெற்றால் மட்டும் தான்
அவனுக்கான இடத்தை உலகில் உருவாக்க முடியும்.
-கவிதை குழல்
5.ஆக்கமும் அழிவும்
அறிவானது ஒரு செயலை ஆக்கவும் செய்யும்
மற்றும் அழிக்கவும் செய்யும்.
-கவிதை குழல்
6.அறிவின் துணைக்கொள்
எது நல்லதோ அதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தீயவற்றை வாழ்விலிருந்து விலக்க வேண்டும்.
-கவிதை குழல்
7.உண்மை பொருள் உணர்க.
எப்பொருளாக இருந்தாலும் அப்பொருளின்
உண்மை பொருளை அறிந்து கொள்ள வேண்டும்.
-கவிதை குழல்
8.நல்லதை தேர்ந்தேடு
ஒரு செயலை செய்ய அறிவின் துணைகொண்டு நல்லவற்றை செய்ய வேண்டும்.
தீயவற்றை செய்யாமல் இருக்க வேண்டும்.
-கவிதை குழல்
9.அறிவு “நட்பு”
அறிவுடையாரின் நட்பினை எப்பொருளை கொடுத்தாலும்
பெற்றுக் கொள்ள வேண்டும்.
-கவிதை குழல்
10.தனிமனித அறிவு
ஒவ்வொரு தனிமனிதன் அறிவும் சமுதாயத்தில்
பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவல்லது.
எனவே எப்போதும் அறிவை தேடி அடைந்து கொள்ளுங்கள்.
-கவிதை குழல்