பொருள் – இடனறிதல் | Kavithai Kuzhal
வணக்கம்!
இடனறிதல் என்ற பிரிவில் இடம் பெற்றுள்ள கவிதையானது, ஒருவன் செயலை மேற்கொள்வதற்கு தக்க இடம் தேவை என்பதை பற்றி கூறுகிறது.
முதலில் இடம் என்பதைப் பற்றிய அறிவைப் பெறலாம்.
இடம் என்பது ஒரு பகுதியில் உள்ள நிலப்பரப்பை குறிப்பதாகும். தொழிலை மேற்கொள்ள விரும்புபவர்கள் சரியான காலத்தை தேர்ந்தெடுத்தால் மட்டும் போதாது. சரியான இடத்தையும் தேர்ந்து எடுக்க வேண்டும். அப்போது தான் மேற்கொண்ட செயலில் வெற்றியானது கிடைக்கும்.
மக்கள் பொருள்களை வாங்கச் செல்கையில் எந்த இடத்தில் நல்ல பொருள் கிடைக்கிறதோ அந்த இடத்தை நோக்கியே திரும்ப திரும்ப செல்வார்கள்.
இடத்தை மக்கள் என்றும் ஞாபகமாக வைத்துக் கொள்வார்கள்.
எனவே இடத்தை சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இடத்தைப் பொறுத்து தான் மேற்கொண்ட செயலை சிறப்பாகச் செய்ய முடியும்.
இடமானது மக்கள் அனைவரும் எளிதாக அடையும் வகையிலும் இருத்தல் வேண்டும்.
மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் கண்டால் அங்கு அதிகமாக விற்பனையாகும்.
எனவேதான் எந்த ஒரு தொழிலை மேற்கொண்டாலும் அதனை விரிவாக்க வேண்டும் என்று நினைவு கொண்டு எதிர்கால தேவைக்காகவும் இடத்தை தேர்ந்தெடுத்து வைத்தல் வேண்டும்.
தொழில் மேற்கொள்ளும் போது மக்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் தொடங்கினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
வெற்றிக்கு தொழிலுக்கான வலிமையும், காலமும், இடமும் சரியாக அமைதல் வேண்டும்
உதாரணமாக ஒரு கதையை கூறுவதன் மூலமாக இடனறிதலின் முக்கியத்துவத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு அழகான கிராமத்தில் மக்கள் சிறப்புடன் செல்வாக்குடன் வாழ்ந்து வருகின்றனர்.அந்த ஊரில் குளமானது ஒன்று இருக்கின்றது.
அந்த குளத்தில் ஒரு முதலை ஆனது வசித்து வருகிறது. அந்த குளத்தில் இருக்கும் அனைத்து உயிர்களையும் முதலையானது தனது பலத்தால் துன்புறுத்தி வருகிறது.முதலையின் செயலானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது.
இதனைக் கண்ட மக்கள் முதலைக்கு தக்க பாடம் புகட்ட வேண்டுமென்று கருதினர்.
முதலைக்கு நீரில்தான் அதிகமாக பலம் வெளிப்படும். அந்த முதலையை நிலத்திற்கு கொண்டு வந்தால் சரியான பாடத்தை புகட்ட முடியும் என்று எண்ணினர்.
இதனால் முதலைக்கு பிடித்த உணவுகளை நிலத்தில் வைத்து அதனை வரவழைத்தனர். பிறகு முதலையை பிடித்து அதற்குத்தக்க பாடத்தையும் புகட்டினர். அன்றிலிருந்து முதலையானது யாரையும் துன்புறுத்துவதில்லை.
நீரினுள் இருக்கும் பலமானது நிலத்தில் வெளிப்படாதது போல நாம் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பாக தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தால் மட்டும் தான் நம்முடைய பலமானது வெளிப்படும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
இதன் மூலம் இடத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு தெளிவானது நம் மனதில் உருவாகியிருக்கும்.
இனி கவிதை குழலின் கவிதைகளின் வாயிலாக இடனறிதல் என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளை காணலாம்.
இடனறிதல் கவிதைகள் – கவிதை குழல்:
1. பலம், பலவீனம் ஆனது
ஒருவன் இருக்கும் இடத்தைப்
பொறுத்து மாறும்.
-கவிதை குழல்
2.செயலை மேற்கொள்ளும் போது
தகுந்த இடத்தை தேர்ந்தெடுக்காவிடில்,
செயலால் பலன் எதுவுமில்லை.
-கவிதை குழல்