கல்வி கவிதைகள்| Kavithai Kuzhal – Tamil Kavithaigal
கல்வி கவிதைகள்| Kavithai Kuzhal – Tamil Kavithaigal
வணக்கம்!
கல்வி என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள், கல்வியின் மேன்மையையும், கல்வியின் இன்றியமையாத தன்மையையும், கல்வியின் பயனையும் விளக்கும்.
முதலில் கல்வி பற்றிய ஒரு அறிவைப் பெறலாம்.
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் கல்வி கற்க வேண்டியது அவசியமாகும்.
கல்வி மட்டுமே ஒருவனின் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடிய வல்லமை வாய்ந்தது.
கல்வி இன்று பல வகைகளில் கற்பிக்கப்படுகின்றது. நாடெங்கும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்ற அனைத்து இடங்களிலும் கல்வியானது கற்பிக்கப்படுகின்றது.
நாம் வளரும் காலத்திற்கு ஏற்பவே கல்வியின் ஆழத்தையும், பொருளின் மேன்மையையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
கல்வி ஒருவனுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத் தருகிறது.கற்றவர்கள், தான் கற்ற கல்வியின் மூலம் அனைத்து மக்களும் நன்மை பெற வேண்டும் என்று எண்ணி புதிய முயற்சிகளை உருவாக்க வேண்டும்.
புதிய முயற்சிகள் உருவாவதன் மூலம் மட்டும் தான் ஓரு நாட்டில் பொருளாதர வளர்ச்சியானது உயரும்.
கல்வியின் மூலம் அறிவை பெருக்கி, புதிய கண்டுப்பிடிப்புகளை உருவாக்க தனிமனிதனை ஊக்கு விக்க வேண்டும்.
ஓருவனுக்கு அளிக்கும் ஊக்கமே, அவனை எந்த ஒரு செயலையும் செய்ய வைக்கும் வல்லமை வாய்ந்தது. ஓவ்வொருவருக்கும் நாம் ஊக்கத்தை அளிக்கும் வகையில் வாழ்தல் வேண்டும்.
கல்வியின் அறிவால் உலகில் எத்தகைய நன்மையை மக்கள் அடைந்தார்கள் என்பதை நீங்கள் கண்கூதாக கண்டு இருப்பீர்கள்.
எனவே, கல்வியை எப்படியாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கல்வியின் பொருளை உணர உணர அறிவானது அளவற்றதாக வெளிப்படும். அந்த அறிவானது பல நபர்களின் வாழ்க்கையை மேம்படுத்த கூடிய வல்லமை வாய்ந்ததாக இருக்கும்.
பல நபர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய கல்வியை தேடிக் கற்று கொள்ள வேண்டும் தானே. என்றும் இளமையில் கல்வி கற்பதை நிறுத்தவே கூடாது.
கல்வி என்பது இன்றைய காலத்தில் வெறும் எழுத்து வடிவம் ஆகவே காணப்படுகின்றது.
இதனால் தான் பெரும்பாலானோர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த தவறிவிடுகின்றனர்.
கல்வி என்பது எழுத்து வடிவமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதனை செயல்முறை வடிவமாகவும் கற்றுக்கொள்ள வேண்டும் .
ஒரு செயலை மேற்கொண்டு கற்கப்படும் கல்விக்கும், பள்ளியில் உள்ள கரும்பலகையில் எழுதி நடத்தும் கல்விக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
கல்வி கற்பதை நன்கு தெளிவாகவும் ஆழ்ந்த பொருளுடனும் கற்று, மனமானது அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் தொடர்ந்து முயன்று கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
கல்வி ஒன்றே அனைவரின் வாழ்க்கையையிலும் மாற்றத்தை உருவாக்கக் கூடியது.
கல்வியை கற்ற அனைவரும் இன்புற்று வாழ்கிறார்கள் என்பதை கண்டாவது கல்வி கற்க வேண்டும்.
இனி கவிதை குழல் மூலமாக ‘’கல்வி’’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளை காணலாம்.
கல்வி கவிதைகள் – கவிதை குழல்;
1. நல்ல அறநெறி நூல்களைப் படித்து, அதன் வழியில் நின்று வாழ வேண்டும்.
2.கல்வி என்பது கண் போன்றது. அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டுமெனில், கல்வி கற்று கொண்டே இருக்க வேண்டும்.
3.கல்வி கற்பது இன்பத்தையே தரும். ஆதலால்தான் கல்வி கற்பவர்கள் மேலும் மேலும் கல்வி கற்கவே விரும்புவார்கள்…
-கவிதை குழல்.